BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 10 October 2014

பூமி வெப்பமடைவதால் மீன்வளம் பாதிக்கும் அபாயம்

பூமி வெப்பமடைந்து வருவதன் காரணமாக உலகக் கடல்களில் மீன்வளம் கிட்டத்தட்ட 24 சதவீதம் குறைந்துவிடும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள்  எச்சரித்துள்ளனர். கடல் நீர் வெப்பமடைவதால் 2001ஆம் ஆண்டு தொடங்கி 2050ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அறுநூறுக்கும் அதிகமான மீன் இனங்கள் பாதிக்கப்படும் என்பதை கணினி மென்பொருள் துணைகொண்டு ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

நீரின் வெப்பம் அதிகரிக்கும்போது அதிலுள்ள ஆக்சிஜனின் அளவு குறைந்துவிடுகிறது. இதன்காரணமாக மீன்களின் உடல் எடையும் கணிசமான அளவில் குறைந்து போய்விடுகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வெப்ப வாயுக்களின் வெளியேற்றத்தால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஏற்கனவே கருதப்பட்டதைவிட மிகவும் அதிகம் என்று விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர். கடல் நீரின் வெப்பம் அதிகரிப்பதால், ஒரு பகுதியில் வாழ்ந்த குறிப்பிட்ட வகை மீன்கள் தாங்கள் ஏற்கனவே வாழ்ந்த பகுதிகளில் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது, பல மீன் இனங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது என மு

நீரின் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய பல்வேறு விளைவுகளைக் அனுமானிக்கும் கணினி மென்பொருளை தற்போது ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். உலகில் வெப்பவாயு வெளியீட்டு விகிதம் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என சர்வதேச அளவில் உருவாக்கப்பட்ட தரவுகளை உள்ளீடு செய்து, அதனால் மீன்வளத்துக்கு எந்த வகையான பாதிப்பு ஏற்படக்கூடும் என இவர்கள் கணித்துள்ளனர்.

கடல் நீரின் வெப்பம் சற்று அதிகரித்தாலே மீன்களுடைய உடல் எடையில் எதிர்பாராத அளவில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஏனென்றால், பாலூட்டி விலங்குகள் போல மீன்கள் சீரான உடல்வெப்பம் கொண்டவையல்ல மீன்கள். கடல் நீரோட்டத்தின் வெப்ப நிலைக்கு ஏற்ப மீன்களின் உடல் வெப்பமும் மாறுபடும். மீன்களின் உடல் வெப்பம் அதிகரிப்பதால் அவற்றுக்கு கூடுதலான ஆக்சிஜன் தேவைப்படும். அது கிடைக்காமல் போனால் அவற்றின் உடல் எடை வேகமாகக் குறைந்துவிடும் என்று இந்த மாற்றத்துக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

கடலில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க வருடத்துக்கு 36 கிலோமீட்டர்கள் என்ற அளவில் துருவப் பகுதிகளை நோக்கி மீன்கள் தங்களது வாழ்விடங்களை மாற்றிக்கொண்டே போகும் என தற்போதைய ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த ஆய்வின் முடிவுகள்  நேச்சர் கிளைமேட் சேஞ்ச் என்ற பத்திரிகையில் பிரசுரமாகியிருக்கின்றன.
ந்தைய ஆய்வுகள் காட்டியிருந்தன.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies