ஜப்பானிய விஞ்ஞானிகளான இசாமு அகசாகி , ஹிரோஷி அமனோ மற்றும் அமெரிக்க விஞ்ஞானியான ஷுஜி நகமுரா ஆகிய மூவருக்கும் 2014 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபள் பரிசு வழங்கப்பட உள்ளது . இவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சக்தி குறைந்த எல்.இ.டி லைட்டுகளை தயாரித்ததால் இவர்களுக்கு நோபள் பரிசு வழங்கப்பட உள்ளது .
அறிவியல் அமைப்பான ராயல் ஸ்விடிஷ் இது குறித்து கூறுகையில் , " உலகில் நான்கில் ஒரு பங்கு கரண்ட் லைட் எறிய வைப்பதற்காக பயன்படுவதால் இவர்களின் எல்.இ.டி உலகின் சக்திகளை பாதுகாக்க பயன்படும் " என்றனர் .