தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஜாமீனில் வெளியே விட சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உத்தரவாதமாக அளிக்கப்பட்டுள்ளன.ஜெயலலிதா சார்பில் பரத் மற்றும் குணஜோதி என்ற இருவரும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று முறையே ரூ.5 கோடி மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை பிணையம் அளித்தனர்.அவற்றை பெற்றுக் கொண்ட நீதிபதி குன்கா, ஜெயலலிதா தப்பியோடிவிட்டால் இந்த சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும் என்று கூறினார். அதற்கு இருவரும் சம்மதம் அளித்ததை அடுத்து, சொத்து உத்தரவாதத்தை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.