ராஜேஷ் இயக்கத்தில் உருவாக இருந்த பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படத்தை கைவிட்டுவிட்டார்கள். பாஸ் என்கிற பாஸ்கரன் படம் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா சந்தானம் , நயன்தாரா நடிப்பில் உருவாகி மெகா ஹிட்டானது. இது சந்தானத்துக்கும் ஆர்யாவுக்கும் ஒரு தனி ரசிகர் கூட்டத்தை இழுத்தது. எல்லா தரப்பினரையும் கவரும் விதமாக இந்த படம் இருந்தது. இந்த படத்தின் இயக்குனர் ராஜேஷ் எடுத்த ஆல் இன் ஆல் அழகு ராஜா திரைப்படம் சரியாக ஒடவில்லை.
அதனால் இழந்த பெயரை மீண்டும் எடுப்பதற்காக பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தின் 2 ஆம் பாகம் எடுக்கும் முடிவில் ராஜேஷ் இறங்கினார். அதே ஆர்யா சந்தானம் கூட்டணியில் உருவாக இருந்தது. இப்போது அந்த முடிவை கைவிட்டு விட்டார். அதற்கு பதிலாக ஆர்யா சந்தானம் தமன்னா கூட்டணியில் ஒரு புது படத்தை இயக்க உள்ளார்.