இந்தியா இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் தடுமாறி வருகிறது. இதில் அதிகம் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது நம்பிக்கை நாயகன் விராத் கோலி தான். இந்த தொடருக்கு முன்பு வரை எல்லாரும் விராத் கோலியை புகழ்ந்து தள்ளி கொண்டு இருந்தார்கள். இப்போது விராத் சோபிக்காததால் அதே கூட்டம் கோலியை விமர்ச்சித்து வருகிறது.
கோலி சரியாக ஆடாததற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது அனுஷ்கா ஷர்மா தான். அவரின் அழகில் மயங்கி அவரை பற்றியே நினைத்து கொண்டு இருப்பதால் இவரால் முழு கவனத்துடன் ஆட முடியவில்லை. அதனால் தான் ரன் எடுக்க தடுமாறுகிறார் என்று கூறுகிறார்கள். இந்த தொடரில் அதிக முறை ஆண்டர்சன் பந்தில் தான் கோலி அவுட்டாகி உள்ளார். எனவே அனுஷ்கா ஷர்மா ஆன்டர்சன்னுக்கு ராக்கி கயிறு கட்டி உள்ளார். அதற்கு கைம்மாறாக அடுத்த போட்டியில் அவர் கோலி விக்கெட்டை எடுக்க மாட்டார். இவ்வாறு பேஸ்புக்கில் கோலியை கலாய்த்து வருகிறார்கள்.
இது மிகவும் தவறான செயல் ஆகும். ஒரு வீரர் நன்றாக ஆடும் போது அவருக்கு துணையாக இருப்பதை விட அவர் நன்றாக ஆடாத சமயத்தில் துணை இருப்பவன் தான் உண்மையான ரசிகன்.