இந்திய அணி வெளிநாடுகளில் தொடர்ந்து தடுமாறி வருகிறது. இப்போது இங்கிலாந்து உடனான தொடரில் தொடர்ந்து 2 போட்டிகளில் தோற்று விட்டது. கடைசி போட்டியில் வென்றால் தான் தொடரை சமன் செய்ய முடியும் . அதற்கு இந்தியா கடுமையாக போராட வேண்டி இருக்கும். இந்நிலையில் இந்தியாவின் தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்து காரணங்கள் ஆராயப்பட்டு உள்ளது. அவை,
* 2 வது டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த இஷாந்த் ஷர்மா காயம் ஆனது.
* இந்தியாவின் பீல்டிங் மோசமாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்லிப் பீல்டிங் மோசமாக உள்ளது. இதுவரை 8 கேட்சுகளை தவறவிட்டு உள்ளனர்.
* தோனியின் கேப்டன்சியில் சில தவறுகள் உள்ளன. அவரது அனுகுமுறை டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு உதவவில்லை.
* சச்சின், டிராவிட், லட்சுமணன் என இந்திய பேட்டிங்கை வலிமையாக்கிய இவர்களுக்கு மாற்று உருவாகவில்லை.
* இந்தியாவின் தூண்களாக நம்ப பட்ட கோலி ரன் அடிக்க வில்லை, நிலைத்து நின்று ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட புஜாரா விரைவில் அவுட் ஆகி விடுகிறார்.