திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பூங்கொடி(வயது 17) (பெயர்
மாற்றப்பட்டுள்ளது), இவர் தஞ்சை தமிழ்பல்கலை போலீசில் ஒரு பரபரப்பு புகார்
கொடுத்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:–
நான் தஞ்சையில் உள்ள ஒரு பாராமெடிக்கல் கல்லூரியில் முதலாம் ஆண்டு நர்சிங் படிப்பில் சேர்ந்தேன். சேரும் போது தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி என்றும், மாணவிகளுக்கு பாதுகாப்பாக தங்கும் விடுதிவசதிகள் உள்ளன என்றும் கல்லூரி தாளாளர் ராவணன் கூறியதை நம்பி எனது பெற்றோர் அவர்கள் விடுதியில் தங்கி படிக்க வைத்தனர். பின்னர் கல்லூரியில் சேர்ந்த பிறகு தான் கல்லூரி எந்தவித அங்கீகாரமும் பெறவில்லை என்பது தெரியவந்தது. அதேபோல் விடுதி என்ற பெயரில் கல்லூரி தாளாளரின் வீட்டின் பின்புறம் ஆஸ்பெட்டாஸ் சீட் போட்ட ஒரு சிறிய அறையில் தங்க வைத்தனர். என்னுடன் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் பலர் தங்கியிருந்தனர்.
அவர்கள் அனைவரும் 17 வயது முதல் 18 வயதிற்குள்ளான மாணவிகள். கடந்த ஜூலை மாதம் ஒருநாள் எங்களது கல்லூரி உரிமையாளர் ராவணன் நாங்கள் குளிக்கும் குளியறை அருகே வந்தார். அப்போது நான் அவரை மறைந்திருந்து பார்த்தேன். அவர் மாணவிகள் குளிக்கும் போது எட்டி பார்த்து கொண்டிருந்தார். அதைக்கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அதன் பின்னர் எந்த மாணவி குளித்தாலும் அவர் எட்டிப்பார்ப்பதை நாங்கள் பார்த்தோம். இதை நாங்கள் வெளியில் சொன்னால் எங்களுடைய பள்ளி படிப்பு அசல் சான்றிதழ்களை எதாவது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் வெளியில் சொல்லாமல் இருந்தோம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் தஞ்சை தமிழ்பல்கலை கழக போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரத்தினாம்பாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து மாணவிகள் குளிப்பதை பார்த்து ரசித்த கல்லூரி தாளாளர் மீது பெண் வன்கொடுமை, பெண் மானபங்கம், பாலியல் குற்றங்களில் இருந்து பெண்கள் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ராவணனை கைது செய்தனர்.