BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 5 August 2014

ஆண்கள் பெண்களை எப்படி ஏமாற்றுறாங்க தெரியுமா ..?

வயது மற்றும் ஹார்மோன் அதிகரிப்பால் பெண்கள் ஏமாந்து போய் தெருவில் நிற்பதை நாள்தோறும் நாம் செய்திகளில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் ஆண்களிடமிருந்து பெண்கள் எப்படித் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

பெண்களைக் தங்கள் வளையில் விழவைப்பதற்காகவே ஆண்கள் பல்வேறு விதங்களில் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். ஆண்களின் புத்திசாலித்தனத்தை எப்போதுமே பெண்கள் மதிப்பார்கள்; அதில் மதி மயங்கவும் செய்வார்கள்.

இருவரும் நன்றாகப் பேசிக் கொண்டிருக்கும் போது, தன்னுடைய கருத்துக்கு அந்தப் பெண்ணின் பதில் என்ன என்பதை புத்திசாலியான ஆண் உன்னிப்பாகக் கவனிப்பான். அவளை சுதந்திரமாகப் பேச விட்டுக் கேட்பான். அவ்வப்போது நகைச்சுவையாகவும் பேசி, அவளைச் சிரிக்க வைப்பான். அவனுடன் இருப்பதால் அந்தப் பெண்ணுக்கு எப்போதுமே போரடிக்காது.

இத்தகைய கவர்ச்சியாக பேச்சின் மூலம் பெண்களை மயக்குவதில் ஆண்கள் கில்லாடிகள். ஆண்கள் கதை, கவிதை, பேச்சு, பெயிண்ட்டிங் என்று தன்னுடைய படைப்பாற்றலை பெண்ணிடம் வெளிப்படுத்துவார்கள். அந்தக் காலத்து பாலசந்தர் படங்கள் போலத் தான் இருக்கும்.

ஆனாலும், இந்தப் படைப்பாற்றல் மிக்க ஆண்களின் ‘வலை’யில் பெண் மீன்கள் சிக்குவது நடக்கத்தான் செய்கிறது. பெண்கள் எந்த அளவுக்கு ஆண்களைக் கவர்ந்து இழுக்க முயற்சிப்பார்களோ, அதே அளவுக்கு சில ஆண்களும் தங்கள் கவர்ச்சியால் பெண்களை விழ வைப்பார்கள். அவன் வேறு ஊரிலிருந்து, அல்லது வேறு மாநிலத்திலிருந்து, ஏன் வேறு நாட்டிலிருந்து வந்திருப்பான்.

ஆனாலும், ஒரு பெண்ணைக் கவர தனக்கென ஒரு தனி பாணியை அந்த ஆண் வைத்திருப்பான். அதில் சிறிது நகைச்சுவையும் கலந்திருப்பது அவனுடைய ப்ளஸ்! ஆண்கள் பெண்களுக்காக பூக்களையும், சாக்லெட்டுகளையும் (நம்மூர் மல்லி & அல்வா?) வாங்கி வராத நாட்களே இருக்காது.

அடிக்கடி அவளைக் கூப்பிட்டு ‘ஐ லவ் யூ’ சொல்வான். கண்ணோடு கண் நோக்கி, தன் காதலை அவளுக்குப் புரிய வைப்பான். அனைத்து விதமான காதல் அசைவுகளையும், அவளுக்காக செய்து காண்பிப்பான். ஒரு பெண்ணுக்கு இவ்வளவு போதாதா? அவள் அவன் வலையில் விழுவதற்கு.
இப்படி பலவிதமாக யுத்திகளை காண்பித்து பெண்களை ஆண்கள் மயங்குகிறார். ஆனால் இது புரியாமல் பெண்கள் ஆண்களில் வலையில் விழுந்து தங்கள் வாழ்க்கையை பாழாக்கி கொள்கின்றனர்

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies