BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 5 August 2014

ஆண்களை பெண்கள் கழற்றி விடுவதற்கான 10 காரணங்கள்!!!

பொதுவாக ஆண்கள் ஏன் பெண்களை விட்டு பிரிந்து செல்கின்றனர் என்பதை பற்றி நாம் அதிகம் யோசிப்போம். அதற்கு காரணம், அதற்கான காரணங்கள் தெளிவாக இருக்கும். ஆனால் மாறாக, ஆண்களை விட்டு பெண்கள் பிரிந்து செல்வதற்கான காரணங்கள் தெளிவாக இருப்பதில்லை. ஆண்களை விட்டு பெண்கள் பிரிந்து செல்வதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளது. ஆனாலும் கூட, மிகவும் முக்கியமான காரணங்கள் இல்லாத பட்சத்தில், பெண்கள் அவ்வளவு சுலபத்தில் தங்கள் உறவை துண்டித்து கொள்ள மாட்டார்கள்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், நீங்கள் உங்கள் காதலிக்கு துரோகம் செய்தால், அவர் உங்களை விட்டு உடனே பிரிந்து செல்லலாம் அல்லது செல்லாமலும் இருக்கலாம். ஆனால் உங்கள் காதலியின் பக்கம் இருந்து பார்க்காமல், உங்கள் தாயின் பக்கம் இருந்து பார்த்தால், அவள் உங்களை உடனே தூக்கி போட்டு விடுவாள். பெண்கள் ஏன் ஆண்களை தூக்கி எறிகிறார்கள் என்பதற்கான காரணங்கள் சில நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் அதற்கான காரணங்களை கண்டுபிடிப்பதே கடினமாகி விடும்.

எப்போதும் வசை மொழி பாடுகிற கணவனோடு கூட சில பெண்கள் நீண்ட காலம் வாழ்ந்து விடுவார்கள். அதே போல் நல்ல கணவனாக இருந்தாலும் கூட, அவர் மிகவும் சலிப்பை உண்டாக்குபவராக இருந்தால், அவரை விட்டு உடனே பிரிந்து விடுவாள். ஏன் ஆண்களை விட்டு பெண்கள் பிரிகிறார்கள் என்பதை கண்டறிவது சில நேரங்களில் உண்மையிலேயே கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனாலும் கூட, பெண்கள் ஏன் உறவை துண்டித்துக் கொள்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்தால், ஒரு முடிவிற்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

இப்போது ஆண்களை பெண்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள் அல்லது பிரிந்து செல்கிறார்கள் என்பதற்கான சில பொதுவான காரணங்களைப் பார்க்கலாமா?

போதுமான சம்பாத்தியம் இல்லாதது

புத்தியுள்ள எந்த ஒரு பெண்ணும் போதிய வருமானம் இல்லாத ஆணுடன் சேர்ந்து வாழ விரும்ப மாட்டாள். தன்னுடைய சம்பாத்தியத்தை விட குறைவாக சம்பாத்திக்கும் ஆண்களும் இதே கதியே. சரி, அப்படியானால் அந்த அளவு எவ்வளவு? அது பெண்ணுக்கு பெண் மாறுபடும்.

நீங்கள் மிகவும் பக்குவமற்றவராக இருத்தல்

தங்கள் மனைவியின் ரூபத்தில், ஆண்கள் தாயை எதிர்பார்ப்பதை போல, தங்கள் கணவனின் ரூபத்தில், பெண்கள் தந்தையை எதிர்ப்பார்ப்பார்கள். அதனால் தான் பக்குவமற்ற முறையில் தங்கள் கணவன் நடப்பது பெண்களுக்கு பிடிப்பதில்லை. ஏதோ சில சந்தர்ப்பங்களில் நடக்கிறது என்றால் அவர்கள் பொறுத்து கொள்வார்கள். ஆனால் இதே குணம் உங்களிடம் நிரந்தரமாக நீடித்தால், கண்டிப்பாக உங்களை ஒரு நாள் தூக்கி எறிந்து விடுவார்கள்.

அவர்களுக்கு தொழில் ரீதியான ஊக்குவிப்பு கொடுக்காமல் போவது

முன்பெல்லாம், "சம்பளத்தை கேட்காதே" என்ற விதி ஆண்களுக்கு மட்டுமே பொருந்தியது. ஆனால் இன்று பெண்களும் சமநிலை போட்டியாளராக திகழ்கிறார்கள். அதனால் அவர்களை தொழில் ரீதியாக நீங்கள் ஊக்குவிக்கவில்லை என்றாலோ, அல்லது தொழில் ரீதியாக தேவையற்ற தொந்தரவை அளித்தாலோ, உங்களை அவர்கள் தூக்கி எறிந்து விடுவார்கள்.

பாலியல் ரீதியாக கையாளுவது

உங்களை பொறுத்த வரை, உங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என நினைத்து அதற்கான காலடிகளை வேகமாக எடுத்து வைப்பீர்கள். அதனால் அவர்களிடம் நீங்கள் உரிமை எடுத்துக் கொண்டு, பாலியல் ரீதியாக அத்து மீறும் போது, அவர்களிடம் நீங்கள் தவறாக நடக்க முயற்சி செய்கிறீர்கள் என நினைத்து உங்களை விட்டு பிரிய முற்படலாம்.

விரைவிலேயே திருமணம் செய்ய கேட்கலாம்

உங்கள் காதலியை நீங்கள் விரைவிலேயே திருமணம் செய்ய கேட்கலாம். அவருக்கோ இந்த உறவு கழுத்தை நெறிப்பதை போன்ற உணர்வு ஏற்படலாம். அப்படிப்பட்ட நேரத்தில், அவர் உங்களை நிராகரிக்கலாம்.

வாழ்க்கையில் செட்டில் ஆவது

இப்போதைக்கு திருமணம் செய்யும் உத்தேசம் இல்லை என்ற உங்கள் எண்ணத்தை உங்கள் காதலி தெளிவாக புரிந்து கொண்டிருக்கலாம். எதிர் காலம் இல்லாத உறவை தொடர பெண்கள் பொதுவாக விரும்பவதில்லை. இது அவர்களிடம் பாதுகாப்பின்மை உணர்வை அலாதியாக ஏற்படுத்தும்.

அவருக்கு குடும்பம் தேவைப்படும்; உங்களுக்கு தேவைப்படாது

பெண்கள் தங்களுக்கென குடும்பம் மற்றும் குழந்தைகள் என அமைத்து கொள்வதில் மிகவும் குறியாக இருப்பார்கள். அவர்களுக்கு குழந்தை குட்டி என பெரிய குடும்பமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்து, உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லாமல் இருந்தால், அவர்கள் உங்களை விட்டு பிரியலாம். பெண்கள் சமரசம் செய்ய விரும்பாத விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.

உங்கள் தாய் அவர்களை மதிக்காமல் நடப்பது

பொதுவாக தன் காதலனை வளர்த்த தாய், அவருடன் எப்படி நடந்து கொள்வாரோ, அதே அளவிற்கு அதே குணத்துடன் தான் திகழ்வார்கள் என்பது பெண்களின் நம்பிக்கையாகும். ஆனால் அப்படி இல்லாமல், அவளுக்கும் உங்கள் தாய்க்கும் ஒத்து போகாமல், நீங்கள் உங்கள் தாய்க்கு எப்போதும் ஆதரவாக பேசினால், அவருக்கு உங்கள் மீதும் ஒரு வெறுப்பு உண்டாகலாம். இதனாலும் பிரியக்கூடும்.

வேலை நிமித்தமாக அவர்கள் விலகி செல்லுதல்

அவர் உங்களை அதிகமாக நேசித்தால், அவருடன் சேர்த்து உங்களையும் உடன் வரச் சொல்வார். வேறு வேலை தேடி நீங்கள் அங்கே இடம் பெயர உங்களுக்கு போதிய அவகாசமும் கூட அளிப்பார். ஆனால் இப்படி நீண்ட தொலைவில் அதிக நாள் பிரிந்து இருக்க பெண்கள் விரும்புவதில்லை. அதனால் நீங்கள் போதிய காலத்திற்குள் இடம் பெயரவில்லை என்றால், அவரை மறந்து விட வேண்டியது தான்.

உங்கள் மீது சலிப்பு உண்டாகியிருக்கும்

ஆண்களின் மீது பெண்களுக்கு சுலபத்தில் சலிப்பு ஏற்பட்டு விடும். அதனால் தான் என்னவோ, கெட்ட பசங்களை தேடி தான் பெண்கள் செல்வார்கள் என்ற சொல் உண்டு. நீங்கள் மிகவும் நல்லவராக இருந்தால், உங்கள் காதலி உங்களை விட்டு சென்று விடலாம். இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...




URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies