இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்னுடன் சண்டையில் ஈடுபட்டதால் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆட்டத்தொகையில் பாதியை அபராதமாக செலுத்த உத்தரவிட்டு உள்ளது. முதல் டெஸ்டின் 2 ஆம் நாள் ஆட்ட இடைவேளியின் போது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்டர்சன் கோபமாகி ஜடேஜாவை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்திய அணி ஆண்டர்சன் மீது புகார் அளித்து இருந்தது. பதிலுக்கு இங்கிலாந்து அணி ஜடேஜா மீது புகார் அளித்தது. இது விசாரணையில் இருந்தது . இதில் ஜடேஜாவுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆன்டர்சன் மீதான குற்றச்சாட்டில் அவர் குற்றமற்றவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி மட்டுமே அப்பீல் செய்ய முடியும். தீர்ப்பு வெளியான 7 நாட்களுக்குள் அப்பீல் செய்யப்பட வேண்டும். அதாவது ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு முன் மட்டுமே அப்பீல் செய்ய இயலும். இந்த நிலையில், தீர்ப்பு பெற்றி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்செய் படேல் கூறுகையில், இந்த விவகாரத்தில் நாங்கள் செய்தது என்னவென்றால், தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய எங்களுக்கு உரிமை கிடையாது என்று தெரிவித்தார்.
எனவே பிசிசிஐ யின் கோரிக்கையை ஏற்று ஐசிசி மேல் முறையீடு செய்யுமா என்று பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும்.