BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 5 August 2014

ஜெயலலிதா விவகாரத்தில் வருத்தம் தெரிவித்தார் இலங்கை அதிபர் ராஜபக்ஷே




இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளமான www.defence.lk என்ற இணையதளத்தில் இந்திய இலங்கை மீனவர் இடையேயான பிரச்னை குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.. குறிப்பாக தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் அத்துமீறி நுழைந்து தாக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும் இந்திய பிரதமருக்கு தமிழக முதல் அமைச்சர் கடிதம் எழுதுவது தொடர்பாக மிகவும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சனங்கள் அந்த கட்டுரையின் முகப்பு பகுதியில் இடம்பெற்றிருந்தது.

நமது பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா எழுதுவது காதல் கடிதங்கள் என அந்த கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது , இதனால் அந்த கட்டுரை அந்த இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்த கட்டுரை இலங்கை அரசின் அனுமதி இல்லாமல் வெளியிடப்பட்டு இருந்தது என அவர்கள் தெரிவித்து இருந்தார்கள். இந்த விவகாரத்திற்காக அவர்கள் மோடியிடமும் ஜெயலலிதாவிடமும் மன்னிப்பு கேட்டார்கள்.

இதில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் , பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து இருந்தார்கள். திமுக சார்பில் பேசிய திருச்சி சிவா , இது போன்ற கட்டுரைகள் வெளியாவதை இலங்கை அரசு தடுக்க வேண்டும் என்றார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதனை எதிர்த்து தமிழ் திரையுலகினர் நேற்று ஆர்பாட்டம் செய்தனர். இலங்கை அரசு இதில் ஜெயலலிதாவிடம் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்கள்.இந்த போராட்டத்தில்  நடிகர்கள் விஜய், சூர்யா, பிரபு, சிவகுமார், பார்த்திபன், ஸ்ரீகாந்த், பாக்யராஜ், விவேக், ஜீவா, விக்ரம்பிரபு, இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய நடிகர் விஜய்,  ஜெயலலிதாவை தவறாக பேசியது தனது தாயை தவறாக பேசியது போல் இருந்ததாக கூறினார்.

இந்த நிலையில், இணையதளத்தில் வெளியான கட்டுரை குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சே தனது வருத்தை தெரிவித்தார். இந்த விவகாரம் நடந்தற்காக நான் வருந்துகிறேன். இது தொடர்பாக நான் அறிக்கை கேட்டுள்ளேன் என்று இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த  மஹிந்தா ராஜபக்சே தெரிவித்துள்ளார். கேவலமான செயல்களில் ஈடுபட்டு விட்டு மன்னிப்பு கேட்பது ராஜபக்ஷேவுக்கு புதிது அல்ல.




பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies