இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு இசட் பிரிவில் இருந்து ஒய் பிரிவுக்கு குறைக்கப்பட்டு உள்ளது. இசட் பிரிவில் ஒருவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டால் அவருடன் 9 போலீஸார் உடன் இருப்பர், இப்போது ஒய் பிரிவுக்கு குறைக்கப்பட்டதால் அவருடன் 7 போலீஸார் தான் இருப்பர். இந்த தகவலை ஜார்க்கண்ட் அரசு அறிவித்தது.
தோனிக்கு முன்னர் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தது. இப்போது அது குறைந்து விட்டதால் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பும் குறைக்கப்படுகிறது என்றார் ஜார்க்கண்ட் மாநில டிஜிபி ராஜீவ் குமார். ஆனால் தோனி ஜார்க்கண்ட் வரும் போது அவருக்கு இசட் பிரிவை விட கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார்.