பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாரூக்கான்.
எப்பவுமே கலகலப்பாக இருக்கும் ஷாரூக், விழாக்களுக்கு சென்றாலும் அதை
அப்படியே தொடர்வார். மேலும் விழா மேடையில் தான் ஏறி நடனமாடி உடன்
இருப்பவர்களையும் ஆட வைத்து விடுவார், அந்தளவுக்கு ஜாலியான மனிதர் ஷாரூக்.
இந்நிலையில் மேற்கு மாநிலம், கோல்கட்டாவில் நடந்த போலீஸ் தொடர்பான
நிகழ்ச்சி ஒன்றில் ஷாரூக் பங்கேற்றார். விழாவில் முதல்வர் மம்தா
பானர்ஜியும் பங்கேற்றார்.
விழாவில், கலை நிகழ்ச்சியில் வழக்கம் போல்
தனது பாணியில் ஆடிய ஷாரூக், திடீரென பாதுகாப்புக்காக நின்றிருந்த பெண்
போலீஸ் ஒருவரை அப்படியே தூக்கி நடனமாடினார். கூடவே அந்த பெண் போலீஸூம்,
ஷாரூக்குடன் நடனமாடினார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சை உண்டாக்கியுள்ளது.
பணியில் இருக்கும், அதுவும் போலீஸ் உடையில் இருக்கும்போது இப்படி ஒரு
நிகழ்வு நடந்திருப்பதால், இது போலீஸ் உடையை அவமதிக்கும் செயல் என்று கூறி
சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஒரு தரப்பினர் கூறி
வருகின்றனர்.