மராட்டிய மாநிலம் தானேயில் இருந்து ஜிரிஷ் என்பவர் தனது மனைவி பூஜா பாண்டேயுடன் உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூருக்கு லோக்நாயக்திலக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார்.
அந்த ரெயில் மத்தியபிரதேச மாநிலம் மெகர் ரெயில் நிலையம் அருகே சென்ற போது, கணவன்–மனைவிக்கு இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பூஜா பாண்டே திடீரென்று ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்தார். அடுத்த சில நிமிடத்தில் அவரது கணவரான ஜிரிசும் ரெயிலில் இருந்து குதித்தார். தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கணவன்–மனைவி இருவரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.