நேற்று 2 நாள் சுற்றுபயணமாக மோடி நேபாள் சென்றார். நேபாள் தலைநகர் காட்மாண்டுவில் வசிக்கும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 5–ம் வகுப்பு படிக்கும் மாணவி மானசி சர்மா. இவருக்கு பத்து வயது ஆகிறது . இவர் தனது தந்தையுடன் மோடி தங்கி இருக்கும் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று மோடியின் ஆட்டோகிராப்பை பெற்றார். உலகின் பிரபலமானவர்களிடம் இருந்து ஆட்டோகிராப் பெற்று உலக சாதனை படைக்க வேண்டும் என்பது அந்த சிறுமியின் விருப்பம் ஆகும்.
மோடி அளித்த அந்த ஆட்டோகிராப்பில் ,நீ வளர்ந்து பெரியவள் ஆனதும் மனித சமுதாயத்துக்கு சேவை செய்; அது தான் சிறந்த சேவை’ என்று எழுதி கையெழுத்திட்டு கொடுத்தார். இது போன்று அந்த சிறுமி இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ராணுவ தளபதி விக்ரம் சிங், கிரிக்கெட் கேப்டன் தோனி, இந்தி திரை உலக நட்சத்திரங்களான வினோத் கன்னா, கோவிந்தா மற்றும் ராக் இசைப் பாடகர் பிரேயன் ஆடம்ஸ் ஆகியோரிடம் இருந்து ஏற்கனவே ஆட்டோகிராப் பெற்றுள்ளார்.