லண்டன் நகைக்கடையான் 77 டைமண்ட்ஸ் தன் கடையின் விளம்பரத்திற்காக கெயின்ஸ்பாரோஹ் என்னும் இடத்தில் இருந்து 10 லட்சம் மதிப்புள்ள வைரம் ஒன்றை ஒரு பெட்டிக்குள் வைத்து , ஹிலியம் பலுனுடன் கட்டி மேல் நோக்கி பறக்க விடப்பட்டது .
மேல் நோக்கிப் பறந்த அந்த வைரம் , விண்வெளி விளிம்பில் பலூன் வெடித்தது . இதனால் மேலே இருந்து கீழே விழுந்தது வைரம் . இங்கிலாந்து சிவில் போக்குவரத்து ஆணையத்தின் உதவியுடன் அது கிழே விழுந்த இடத்தை அறிந்தனர் . அது கெயின்ஸ்பாரோஹ் இடத்தில் இருந்து ஐந்து மைல் தூரத்தில் விழுந்து இருப்பதாக கூறுகின்றனர் .
மேலும் அந்த வைரத்தை எடுப்பவர்களுக்கு அந்த வைரம் சொந்தம் என்றும் அறிவித்துள்ளனர் .