சென்னை:-1990ம் ஆண்டிலிருந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்
விக்னேஷ். இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.பாலா இயக்கிய முதல் படமான சேதுவில் நடிக்க வேண்டியவர். கால்ஷீட் பிரச்னை காரணமாக நடிக்க முடியாமல் போகவே விக்ரம் நடித்தார்.
விக்னேஷ் சினிமாவில் தொடர்ந்து போராடி வந்தாலும் வெற்றி அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
சினிமாவில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்கிற உறுதியோடு தற்போது அவன் அவள் என்ற படத்தை சொந்தமாக தயாரித்து, நடித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: 20 வருடத்திற்கு மேலாக சினிமாவில் இருக்கிறேன்.
வெற்றியை விட தோல்விகளை அதிகம் சந்தித்திருக்கிறேன். ஆனாலும் ஒவ்வொரு படத்திலும் ஜெயிப்போம் என்கிற வெறியோடு நடிக்கிறேன். மொட்டையடித்து நிர்வாணமாககூட நடித்திருக்கிறேன். அந்த படங்கள்கூட எனக்கு தோல்வியைத்தான் பரிசாக கொடுத்தது.
எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்று என் மொத்த சேமிப்பையும் போட்டு அவன் அவள் படத்தை தயாரிக்கிறேன். இதற்கு என் மனைவி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவருடன் இப்போது பேச்சு வார்த்தை இல்லை. வீட்டுக்கும் செல்வதில்லை.
எடிட்டிங் ஸ்டூடியோவிலேயே இருக்கிறேன். ஒரே ஒரு வெற்றிக்காக வீடு, மனைவி, மக்கள் இருந்தும் நடுத்தெருவில் நிற்கிறேன். இந்த முறை தமிழக மக்கள் எனக்கு வெற்றியைக் கொடுத்து நான் இழந்த எல்லாவற்றையும் மீட்டுத் தருவார்கள் என்று நம்புகிறேன் என்கிறார் விக்னேஷ்.