வருகிற சுதந்திர தினம் அன்று 5 நபருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது . இந்த எதிர்பார்ப்பு உள்துறை அமைச்சகம் ரிசர்வ் வங்கியிடம் 5 பாரத ரத்னா விருதுகள் செய்ய ஆர்டர் கொடுத்ததை அடுத்து அதிகரித்துள்ளது .
அந்த 5 பேரில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் க்கும் விருதுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
ஆனால் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , " 5 ஆர்டர் செய்தால் 5 பேருக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று கட்டாயமில்லை . ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆக 5 ஆர்டர் செய்யப்பட்டுள்ளது " என்றார் .