பாரத் ரத்னா விருது பெற்ற மேதை சி.என்.ஆர்.ராவ் கூறுகையில் , " நமது பள்ளிகளில் நடத்தப்படும் அறிவியல் மிகவும் பழைய தொழில்நுட்பம் , அதனை இப்போது யாரும் ஆராய்ச்சி கூடங்களில் பயன்படுத்துவதில்லை . ஆசிரியர்கள் நடத்துவது மாணவர்களுக்கு போர் அடிக்கிறது . இந்தியாவில் ஆசிரியர்கள் தரம் சரியாக இல்லை . முதலில் நாம் அவர்கள் தரத்தையும் , அவர்கள் சொல்லிக் கொடுக்கும் தரத்தையும் உயர்த்த வேண்டும் " என்றார் .
மேலும் அவர் நமது நாட்டில் அறிவியல் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என சுட்டிக் காட்டினார் .