நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்த்திபன் இயக்கிவரும் புதிய படம் ‘கதை
திரைக்கதை வசனம் இயக்கம்’. முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருக்கும்
இப்படத்தில் ஆர்யா, விஷால், விஜய் சேதுபதி, அமலாபால், டாப்சி உள்ளிட்ட
முன்னணி நடிகர்களும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட்
15-ந் தேதி வெளியாகவிருக்கும் இப்படம் அனைவர் மத்தியிலும் பெரும்
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் மாலைமலர்.காமிற்காக பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது,
திருட்டு விசிடியை ஒழிக்க வேண்டும் என்று எல்லா இடங்களிலும் நான் சொல்லி வருகிறேன். ஆனால், நீங்கள் மட்டும் கொரியன், சைனீஸ் படங்களில் இருந்து காப்பி பண்ணி படம் எடுக்கிறீங்க. நீங்கள் செய்வது திருட்டு இல்லைன்னா, நாங்க செய்றதும் திருட்டு இல்லைன்னு சில குணச்சித்திரங்கள் சொல்றாங்க.
அப்படி சொல்றவங்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். முதலில் என்னுடைய படமான ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை தியேட்டரில் போய் பாருங்கள். நான் அப்படத்தை கொரியன், சைனீஸ் படங்களில் இருந்து காப்பி அடித்து எடுத்திருந்தால், தைரியமாக திருட்டு விசிடி தயாரிக்கலாம்.
அந்த மாதிரி பிற மொழிகளிலிருந்து காப்பி செய்து படமெடுப்பது என்பது அசிங்கமான ஒரு செயல். அப்படி ஒரு செயலை யார் செய்தாலும், நீங்கள் திருட்டு விசிடி எடுங்கள். அப்பொழுதுதான் நாங்கள் திருந்துவோம். ஒன்று உங்களால் நாங்க திருந்தணும், இல்லைன்னா எங்களால் நீங்க திருந்தணும், ஆனால், அதுவே ஒரிஜினலான படம் என்று தெரிந்தால் தயவுசெய்து திருட்டு விசிடி எடுப்பது, கேபிள் டிவிக்களில் ஒளிபரப்புவது என எதையும் செய்யாதீர்கள்.
‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ கண்டிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் இருக்கும். இந்த படத்திற்கு உங்கள் கைத்தட்டலை பெரிதும் எதிர்பார்க்கிறேன் என்று பேசினார்