இயக்குனர் ராதாமோகன், செல்வராகவன், சிம்புதேவன் ஆகியோரிடம் உதவியாளராக
பணியாற்றிய ஜோதி முருகன் இயக்கும் புதிய படம் கபடம். இப்படத்தில் சச்சின்
கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அங்கனா ராய் நடிக்கிறார். மேலும்
ஆதித்யா, காதல் சரவணன், அனிகா, அஸ்வின், ஹேமா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு சாஷி இசையமைக்கிறார். கே.திருநாவுக்கரசு ஒளிப்பதிவை செய்கிறார். கதை, திரைக்கதை எழுதி ஜோதி முருகன் இயக்குகிறார். இப்படத்தை அஜீத்தை அறிமுகப்படுத்திய ‘அமராவதி’ மற்றும் ‘தலைவாசல்’ உட்பட பல வெற்றி படங்களை தயாரித்த சோழா பொன்னுரங்கத்தின் சோழா கிரியேஷன்ஸ் மற்றும் மௌண்டன் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
எதிர்மறையான எண்ணம் கொண்ட ஜோடிகள் நிச்சயம் செய்துகொள்கிறார்கள். நிச்சயதார்த்தத்திற்கு பிறகு இருவரும் பழகுகிறார்கள். பழக்கத்தின் போது அவளது நடவடிக்கைகள் அவனுக்கு ஒத்துப் போகவில்லை. திருத்தி விடலாம் என்று முயற்சி செய்கிறான் ஹீரோ. அதில் அவன் வெற்றி பெற்றானா? இல்லையா? என்பதை விறுவிறுப்புடன் சொல்லி இருக்கிறார்களாம்.
இப்படத்தின் மூலம் நாயகன் சச்சினுக்கும் – அங்கனா ராய்க்கும் நல்ல பேர் கிடைக்கும் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றது.