ஒடிசலான தேகத்துடன் வெட வெட வென்று இருக்கு கிஷோர் கே ஸ்வாமி ஃபேஸ்புக்கில் அதிமுகவின் தீவிர விசுவாசியாக வலம் வருபவர், திமுக தலைவர் கருணாநிதி மீது சமீபத்தில் வழக்கு தொடுத்துள்ளார், மேலும் கனிமொழி உட்பட திமுகவின் பெரிய குடும்பத்தினர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் அதிமுக ஆதரவாளராக வலம் வரும் கிஷோர் கே ஸ்வாமி மீதே நேற்று காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர், இது குறித்து கிஷோர் கே ஸ்வாமி ஃபேஸ்புக்கில் எழுதிய தாவது...
இன்று நடந்த சம்பவம் ,,,
இரவு 9.45 ... பில்லர் உதயம் தியேட்டர் அருகில் , ஒரு நண்பர் இருசக்கர வாகனத்தில் , என்னை அருகில் இருக்கும் இடத்திற்கு விடுவதற்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கிறார் .
சாலை பாதுகாப்பு காவல் துறையினர் நிறுத்தினார்கள் . மிதமான அளவு அந்த நண்பர் மது அருந்தியுள்ளார் . நான் மது அருந்தியிருக்கிறேனா என்று கேட்டார் ... அருந்தியிருக்கலாம் , அது உங்களுக்கு அவசியமில்லாத விஷயம் என்று சொன்னேன் , நான் வாகனம் ஓட்ட வில்லை என்பதனால் .
நண்பரிடம் பேசி அவர்கள் ஏதேதோ மிரட்டிக் கொண்டிருக்க , நான் அருகில் சென்று , சார் , என் வக்கீல் உங்களிடம் பேச விரும்புகிறார் , நீங்கள் என்ன வழக்கு வேண்டுமானாலும் முறையே பதிவு செய்யுங்கள் , அதற்க்கான அபராதம் என்னவோ அதை நாங்கள் நீதிமன்றத்தில் கட்டி விடுகிறோம் என்று சொன்னது தான் தாமதம் ...
" யோவ் ... யாருய்யா நீ " என்று மிரட்டல் தொனியில் கேள்வி
நான் உடனே , சார் , நான் இவருடன் வாகனத்தில் வந்தவன் , உங்களிடம் நான் எதையும் தவறாக கேட்கவில்லை . தயவு கூர்ந்து அபராதத்திர்கான தாக்கீதை கொடுங்கள் , என்று சொல்ல ...
"டேய் ... தே... பைய்யா ... நீ யாருடா என்னை கேள்வி கேட்க "
என்பது அவரது பதில் ....
சார் , நான் உங்களிடம் மரியாதையாக பேசிக் கொண்டிருக்கிறேன் , தயவு கூர்ந்து மரியாதையாக பதில் அளியுங்கள் என்று சொல்ல ...
"ஒம்...... உனக்கென்ன டா மரியாத "
இப்படி பேசியவுடன் ... லஞ்சம் வாங்கி பிழைப்பை நடத்தும் உங்களுக்கே இவ்வளவு மரியாதை கொடுத்து நான் பேசும் பொழுது ... அபராதத்தை கட்டுகிறேன் என்று சொல்லும் எனக்கு நீங்கள் மரியாதை தந்து தானாக வேண்டும் ... என்று நான் பதிலுக்கு கூறினேன்
நீங்கள் காவல் துறை அதிகாரி என்கிறீர்கள் , உங்கள் சட்டைப் பையில் உங்கள் பெயர் கொண்ட அட்டை இருக்க வேண்டும் , அது இல்லை . அதுவே சட்டப் படி தவறு , அதையும் மீறி தவறான வார்த்தைகளை உச்சரிக்கிறீர்கள் , அதுவும் தவறு என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே ...
அவருடன் இருந்த 4 காவலாளிகள் சரமாரியாக என்னை அடிக்கத் துவங்கினார்கள் ...
சரி அடியுங்கள் .. எனக்கு அது குறித்து கவலையில்லை , ஆனால் , கேள்வி கேட்கும் நபர்களை இப்படித் தான் அசிங்கமாகத் திட்டுவீர்களா என்று கேட்டுக் கொண்டே இருந்தேன் ...
நண்பர் என்னிடம் வந்து சமாதானமாகப் போகலாமே என்று சொல்ல ... இல்லை , இவர்களுக்கு நாம் யார் என்று காட்ட வேண்டும் என்பதை விட ... இவர்களுக்கு சில விஷயங்களை புரிய வைக்க வேண்டும் என்பதே முக்கியம் என்று ... மிகத் தெளிவாக உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள் என்று நான் சொல்ல ...
அவர் அருகில் இருந்த சட்டம் ஒழுங்கு காவல் துறை பெண் அதிகாரியிடம் என்னை ஒப்படைத்தார் ...
அந்த அம்மணி , நவீன சொர்ணாக்கா போல ... ஆரம்பமே அசத்தலாக இருந்தது , ஏன்டா தே ... மவனே என்று ஆரம்பித்து திட்ட....
மேடம் நீங்கள் என் தாயை போன்றவர் , நான் எந்தத் தவறும் செய்யவில்லை , கேள்வி கேட்டேன் , அதற்கு அடிக்கிறார்கள் .. இப்பொழுது நீங்களும் தவறாக நடந்துக் கொள்கிறீர்கள் ... என்று சொல்லிப் பார்த்தும் .. ஜீப்பில் ஏற்றி ஆர் 3 காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள் ...
அங்கே இருந்த உயர் அதிகாரி , அவர் பெயர் இஸ்மாயில் என்று நினைக்கிறேன் ...
என்ன விஷயம் என்று கேட்டார் ... அதற்கு நான் சொல்லும் முன்னரே முந்திக் கொண்ட அந்த ட்ராபிக் அதிகாரி ...
சார் என்னை தரக் குறைவாக பேசி என்னை பணி செய்ய விடாமல் இவர் தடுக்கிறார் என்றார் ...
நம்ப முடிகிறதா ? என் உடலமைப்பைப் பார்த்தால் , எவரையும் , அதுவும் காவல் துறை அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுக்கும் சரீரமா எனக்கு ?
அத்து மீறியது அந்த அதிகாரி , நான் கேள்வி மட்டுமே கேட்டேன் , என்னை இங்கே அழைத்து வந்துள்ளீர்கள் .. எனக்கு எதற்கும் பயமோ கவலையோ இல்லை ... புகாரை பதிவு செய்யுங்கள் , இவர் என்னை அடித்தார் என்பதையும் நான் பதிவு செய்கிறேன் , என்னிடம் ஆதாரம் இல்லாமல் இருக்கலாம் .. ஆனால் என் மனசாட்சி போதும் ... என்று நான் சொல்ல
அந்த அதிகாரி அந்த ட்ராபிக் காவல் அதிகாரியிடம் ஏதோ சொல்லி சமாளிக்கச் சொன்னார் ...
அதற்குள் என் வக்கீலும் அங்கே ஆஜராக , வழக்கை பதிவு செய்யுங்கள் என்று நான் அடம் பிடிக்க ... பின்னர் , அந்த அதிகாரி என்னிடம் வந்து மன்னிப்புக் கோருவதாக கூறினார் ...
எதற்கு மன்னிப்பு ? அவர் அதிகாரி அவர் பணியை அவர் செய்கிறார் ... நான் சாமானியன் ... கேள்வி கேட்கிறேன் , உரிய பதில் அளிக்க வேண்டியது அவர் கடமை , பதில் அளிக்க முடியாது என்று சொல்வதும் அவர் உரிமை ... ஆனால் கேள்வி கேட்டதற்கே அடிப்பேன் என்பது நியாயமில்லை ...
என்னை பொதுவில் 30 பேர் பார்க்கும் படி அடித்தது எனக்கு அவமானமில்லை ... ஆனால் இனியும் நீங்கள் எவரிடமும் அவ்வாறு நடந்துக் கொள்ளக் கூடாது அவ்வளவே ... நீங்கள் யூனிபார்ம் அனிந்து வந்திருக்கும் அதிகாரி ... நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்பது முறையாகாது , எனக்கு அது அவசியமும் இல்லை ...
நான் யார் , என் பின்னணி என்ன என்றெல்லாம் காண்பித்து உங்களிடம் எனக்கு சலுகையும் தேவையில்லை ... அபராதம் என்னவோ அதைக் கட்ட நான் தயார் . ஆனால் , இனி எவரிடமும் இப்படி முறைகேடாக நடந்துக் கொள்ளாதீர்கள் ....
நீங்கள் எங்கள் சேவகர்கள் , எங்கள் எஜமானிகள் அல்ல .... 7 கோடி மக்களுக்கு 83 ஆயிரம் காவல் துறையினர் தான் என்பதை நானும் அறிவேன் , உங்களுக்கு இருக்கும் மன அழுத்தங்களையும் நான் அறிவேன் ... அதனால் தான் , உங்கள் மீது எனக்கு கோவம் இல்லை ... ஆனால் வேறு எவருக்கும் இப்படி இனி நடக்கக் கூடாது என்பதனால் தான் இவ்வளவு போராட்டமே ...
நன்றி வணக்கம் .. என்று கூறிவிட்டுக் கிளம்பினேன் ...
பின்னால் வந்த அந்த அதிகாரி என்னிடம் சொன்னது
சார் . தப்பு நடந்திடுச்சு ... ஆனாலும் , மன்னிப்பு தேவையில்லைன்னு சொன்னீங்க பாருங்க , அது தான் பெரிய விஷயம் என்றார் ...
அது பெரிய விஷயமில்லீங்க ... நான் பட்ட அவமானம் இனி எவருக்கும் ஏற்படக் கூடாது என்றால் , அங்கே அவசியப் படுவது தண்டனையில்லை , விழிப்புணர்வு .. என் வலி என்ன என்று உங்களுக்குத் தெரிய வேண்டும் என்று நினைத்தேன் , தெரியப் படுத்திவிட்டேன் ... அதே வலி உங்களுக்கும் ஏற்பட வேண்டும் என்று நினைத்தால் , என் வலியை நான் முழுவதுமாக உணரவில்லை என்றே அர்த்தம் ...
இப்படிச் சொல்லி தற்பொழுது தான் வீடு வந்து சேர்ந்தேன்
இதைச் சொல்வதனால் என்னை யார் கிண்டல் செய்வார்கள் என்பதை விட ... ... இனி எவரையும் இவர்கள் இவ்வாறு நடத்தக் கூடாது என்பதற்கு தான் .... எல்லோரும் தெரிந்துக் கொள்ளுங்கள் , கேள்வி கேட்க பழகிக் கொள்ளுங்கள் ... இவர்கள் ஒன்றும் கடவுள் இல்லை ... கேள்விக்கு அப்பார் பட்டவர்களும் இல்லை .... கேள்வி கேளுங்கள் ... பதில் சொல்ல வேண்டிய சேவகர்கள் தான் இவர்கள்
https://www.facebook.com/kishore.kswamy/posts/10202646635755441