நடந்து முடிந்த காமென்வெல்த் போட்டியில் இந்திய வீரர் ராஜிந்தர் ரஹேலு பளுதூக்குதலில் 185 கிலோ தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். இவர் ஏற்கனவே 2004 ஒலிம்பிக்ஸில் வெண்கல பதக்கம் வென்று இருந்தார். பதக்கம் வென்ற பிறகு அவர் சொன்ன முதல் வார்த்தை அவரது தாய்க்கு நன்றி சொல்வதாக கூறினார்.
இவர் போலியோவால் பாதிக்கப்பட்டவர். அதனை பொருட்படுத்தாமல் தனது கடின உழைப்பின் மூலம் பதக்கம் வென்று உள்ளார். ஆனால் இவரது இந்த சாதனை எந்த ஊடகங்காளும் பாராட்டப்படவில்லை. கடின உழைப்புக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைப்பதில்லை.