BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 4 August 2014

பிறப்பு முதல் பத்து வயது வரை

குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒவ்வொரு தாய்மார்களுக்கும் கிடைத்திருக்கும் வர பிரசாதம் என்று நினைத்தாலும் ,அக்குழந்தையை எவ்வாறு நல்ல முறையில் வளர்ப்பது என்ற பயம் எல்லா தாய்மார்களுக்கும் இருக்கிறது .ஆனால் அடிப் படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டால், குழந்தை வளர்ப்பு மகிழ்ச்சி யான பாசம் நிறைந்த கலை என்பதை புரிந்து கொள்ளலாம்.குழந்தை வளர்ப்பில் அடிப்படையான விஷயங்கள் இதோ உங்களுக்காக .


பிறப்பு முதல் ஒரு வயது வரை:

பிறந்த குழந்தைக்கு தினமும் இரண்டு மணிக்கு ஒரு முறை பாலூட்ட வேண்டும் .குழந்தை ஒவ்வொரு முறை அழும் போதும் பசியால்தான் அழுகிறதோ என்று நினைக்கிறார்கள்.பசியால் அழுகிறதா அல்லது வாயு (காஸ்) -ஆல் அழுகிறதா என்று பார்க்க வேண்டும்.ஒவ்வொரு முறை பால் கொடுத்தபிறகு குழந்தையை தோளில் போட்டு மெதுவாக தட்டி கொடுக்கவேண்டும்.

குழந்தைக்கு தேவையான அளவு உணவு கிடைக்கிறதா என்பதை அறிய பலவழிகள் இருக்கின்றன. அதில் ஒன்று குழந்தையின் எடையை கவனிப்பது. குழந்தை பிறக்கும்போது எவ்வளவு எடை இருக்கிறதோ, நாலு மாதத்தில் அந்த எடை இரட்டிப்பாக வேண்டும். பிறக்கும் போது 2.7 கிலோ என்றால், 5.4 கிலோவாக இருக்க வேண்டும். தேவையான அளவு பால் கிடைத்தால், குழந்தையின் எடை இந்த அளவு அதிகரித்து விடும். குழந்தை யின் சிறுநீர் அளவு, மலத்தின் அளவைப் பார்த்தும் தேவையான அளவு பால் கிடைப்பதை உறுதி செய்து விடலாம்.

பிறந்த குழந்தைகளை தாயே பயமின்றி குளிப்பாட்டலாம். முதலில் `பேபி ஆயில்’ பயன்படுத்தி உடலை வருடி விடுங்கள். அம்மாவின் வருடல் குழந்தைக்கு ஆனந் தத்தை அளிக்கும். `மசாஜ்’ மூலம் குழந்தையின் உடலுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.இல்லையெனில் குழந்தையை குளுப்பாடும் பாத் டப் -ல் குளுப்படலாம் .



குளிப்பாட்டிய உடன் தலையை துவட்ட வேண்டும். உடலை துடைக்கும்போது காதுகளின் உள் பகுதியில் இருக்கும் ஈரத்தை தவறாமல் துடைத்து விட வேண் டும். மூக்கை மேல் இருந்து கீழாக லேசாக அழுத்தி, அங்கிருக்கும் தண்ணீரையும் அப்புறப்படுத்த வேண்டும். அதன் பிறகு பவுடர் பூசி துணி அணிவிக்க வேண்டியது தான். குளியல் முடிந்ததும் குழந்தைக்கு பசி எடுக்கும் பால் கொடுத்து தூங்க வைத்து விடலாம்.

சில குழந்தை வாயில் விரல் வைக்கும் பழக்கம் இருக்கும் .அது எதற்காக என்று தெரிந்து கொள்ளவேண்டும் .சில குழந்தை பசிக்காக அழும் ,சிலர் வாயில் விரல் வைத்து தன் பசியை தெரிவிப்பார்கள் .என்னவே பசி அறிந்து தகுந்த நேரத்தில் உணவு கொடுதொமேன்றால் விரல் வைப்பதை குறைக்கலாம்.

இரவு நேரத்தில் சில குழந்தைகள் தொடர்ச்சியாக அதிக நேரம் அழும். பசி, வயிற்று வலி, மலச்சிக்கல், உஷ்ணம், சிறுநீர் கழித்தலால் ஏற்பட்ட ஈரத்தன்மை, கொசுக்கடி, இறுகிய ஆடை, குளிர்… போன்ற ஏதாவது காரணம் இருக்கலாம். அறையில் தேவையான காற்று கிடைக்கா விட்டாலும், அதிக அளவு பால் குடித்து விட்டாலும் கூட குழந்தைகள் அழலாம்.

ஒரு வயதான குழந்தைக்கு இரவில் பால் கொடுக்கலாமா? என்ற கேள்வியை பலரும் எழுப்புகிறார்கள். தூங்கச் செல் லும் போது குழந்தைக்கு `பாட்டிலில் பால்’ கொடுக்காமல் இருப்பது நல்லது. கொடுத் தால் குழந்தையின் பல் சேதமாகக் கூடும். இரவு உணவு கொடுத்து விட்டு குழந் தைக்கு ஒரு கப் பால் கொடுங்கள். அதற் குப் பிறகு ஒரு கப் தண்ணீர் கொடுங்கள். இதன் மூலம் வாயில் இருக்கும் பாலின் தன்மை கழுவப்பட்டு விடும்.

சைவ உணவு சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சைவ உணவை சாப் பிடும் பழக்கம் கொண்டவர்கள் குழந் தைக்கு அசைவ உணவு கொடுத்துதான் ஆகவேண்டும் என்பதில்லை. பால், தயிர், வெண்ணை போன்ற பால் வகைப் பொருட்களை கொடுக்கலாம். பயிறு வகை களை உணவில் சேர்த்தால், குழந்தைக்குதேவையான புரோட்டீன் சத்து கிடைத்து விடும்.

2முதல் 3 வயது வரை:

இரண்டு வயது முதல் நான்கு வயது வரை மிகவும் துருதுரு என்று இருக்கும் பருவம் .இரண்டு வயதில் சில வார்த்தைகள் பேச ஆரம்பிக்கும் குழந்தையுடன் பெற்றோர்கள் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் .அப்பொழுது தான் நிறைய பேச கற்றுகொல்வார்கள்.  அப்பா-அம்மா பேசுவதை பார்த்தும் கேட்டும்தான் குழந்தைகள் பேசத் தொடங்குகின்றன. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல் பவர்களாக இருந்தால், குழந்தைக்கு அவர்களோடு செலவிடும் நேரம் மிகக் குறைவாக இருக்கும். இந்த மாதிரி குழந்தைகள் தாமதமாகத்தான் பேசும். குழந்தை சரியாக பேசவில்லை என்பதை உணர்ந்தால், `ஸ்பீச் தெரப்பிஸ்ட்’டிடம் ஆலோசனை பெறவேண்டும்.

குழந்தைகள் விரல் சப்புவது சகஜமான விஷயம். அதை நிறுத்துவதற்காக அடிப் பதோ குற்றஞ்சாட்டுவதோ கூடாது. இந்த வயதில் குழந்தைகள் கிடைப்பதை எல் லாம் வாயில் வைக்கும் பழக்கம் கொண் டவை. அந்த அடிப்படையில்தான் விரலை யும் வாயில் வைத்து சப்புகிறது. பயத்தின் மூலமும் சில குழந்தைகள் விரலை சப்பும். குறிப்பிட்ட வயதில், இந்த பழக்கம் நீங்கி விடும்.


இரண்டு வயது குழந்தைகள் 9மணி நேரமாவது உறங்கும். சில குழந்தைகள் அதிக நேரம் தூங்காது. அதற்கு அறை யின் உஷ்ணம், சத்தம், கொசுக்கடி போன்ற ஏதாவது காரணமாக இருக்கும். குழந்தை சற்று குறைவான நேரமே தூங்கி னாலும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

குழந்தைகள் மூன்று, நான்கு நாட்க ளுக்கு ஒருமுறை மலங்கழிக்கும். சில நேரங்களில் பச்சையாகவும் மலம் வெளி யேறும். இதற்கு பல காரணங்கள் உண்டு. சில குழந்தைகளுக்கு மலம் வெளியேறும் போது வலி ஏற்படும். அதற்கு பயந்து மலம் கழிக்காமலே இருந்து விடும். அவ்வாறு செய்தால் வயிற்றில் மலத்தின் அளவு அதி கரித்து அதிக வலி தோன்றும். இது மலச் சிக்கலாகி விடும். இந்த நிலை ஏற்பட்டால் டாக்டரின் ஆலோசனையைப் பெற வேண்டும். ஒரு சில நேரம் பச்சை நிறத் தில் வெளியேறினால் பிரச்சினை இல்லை. தொடர்ச்சியாக பச்சை நிறத்தில் இருந் தாலோ, வயிற்றை இளக்கிச் சென்றாலோ டாக்டரிடம் காட்ட வேண்டும்.குழந்தைக்கு நிறைய தண்ணீர் தினமும் கொடுக்கவேண்டும்.மலச்சிக்கல் போக காலையில் உலர் திரக்சை ஊறவைத்த தண்ணீரையும் அந்த பழத்தையும் சேர்த்து கொடுத்தால் மலசிக்கல் போய்விடும் .

குழந்தைகள் பெரும்பாலும் மருந்து குடிக்க மறுக்கவே செய்யும். அதனால் மருந்து கொடுக்கும்போது அவைகளு டைய கவனத்தை விளையாட்டின் பக்கம் திருப்பி விட வேண்டும். விளையாட்டு காட்டியபடியே கொடுத்து விடலாம். குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மைகள் வாங்கிக் கொடுக்கும்போது குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை தூண் டும் விதத்தில் அது இருக்கவேண்டும்.ஒவ்வொரு முறை விளையாட கொடுக்கும் பொது நன்றாக சுத்தம் செய்து கொடுக்கவும் .  பேப்பர்களை மடக்கி, விமானம், கப்பல் போன்றவைகளை உருவாக்கச் செய்யலாம்.

4 முதல் 10 வயது வரை:

இந்த வயதில் குழந்தைகளின் மூளை வளர்ச்சி யும், கற்பனைத் திறனும் அதிகரிக்கும். அதனால் வீட்டுச் சுவர்களில் இஷ்டத்திற்கும் கோடு போட்டு படம் வரைவார்கள். இது ஊக்கு விக்கப்பட வேண்டிய விஷயம்தான். ஆனாலும் வீடு முழுவதும் எல்லா சுவர்களிலும் வரைவது வரவேற்கத் தக்கதல்ல. ஏதாவது ஒரு சுவரில் வரையச் சொல்லுங்கள் அல்லது அதற்கென்று கரும் பலகை ஏதாவது வைத்துக் கொடுத்து விடுங்கள்.

பள்ளிக்கூடத்திற்குச் செல்ல சில குழந்தைகள் அடம்பிடிக்கும். அப்போது குழந்தைகளை அடிக்காமலோ, மிரட்டாமலோ,அவைகளுக்கு ஏன் பள்ளிக்கூடம் பிடிக்கவில்லை என்பதை மனரீதியாக ஆராய வேண்டும். உடன் படிக்கும் குழந்தைகள் தரும் மனோரீதியான தொல்லை, உடல்ரீதியான தொல்லை, ஆசிரியர்களின் மிரட்டல் அல்லது ஆசிரியர்கள் கொடுக்கும் தண்டனை, பாடல் களை புரிந்து கொள்வதில் ஏற்படும் பிரச் சினைகள் போன்ற பல காரணங்களால் குழந்தைக்கு பள்ளிக்கூடம் பிடிக்காமல் போகலாம்.

இப்போது 5, 6 வயது சிறுவர் :

சிறுமியர் தினமும் அதிக நேரம் கார்ட்டூன் சேனல் களைப் பார்த்து பொழுதுபோக்குகிறார் கள். அதிக நேரம் அவர்கள் டி.வி. பார்ப்பது கண்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் கெடு தல் ஏற்படுத்தும். அதனால் விளையாட்டு, இதர பொழுதுபோக்குகளில் சிறுவர் களுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துங்கள்.

பல பெற்றோர், தங்கள் குழந்தைகள் போதுமான அளவு உணவு உண்பதில்லை என வருத்தப்படுகிறார்கள். தினமும் இட்லியையும் தோசையையும் கொடுத்தால், குழந்தைகளுக்கு வெறுப்பு ஏற்படத்தான் செய்யும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தினமும் சக மாணவ-மாணவிகள் மூலம் விதவிதமான உணவுகளைப் பார்க்கிறார்கள். அதனால் தங்கள் வீடுகளிலும் நிறத்திலும், சுவை யிலும் வித்தியாசமுள்ள உணவுகளை எதிர்பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட உணவு களை கொடுக்கும்போது குழந்தைகள் தாராளமாக உண்ணவேச் செய்யும்.

இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு படிக்கும்போது சிறுவர் சிறுமிகளிடம் என்ன கலை ஆர்வம் இருக்கிறது என்பது தெரிந்து விடும். பாடும் ஆற்றல் இருப்ப தாக உணர்ந்தால், அதற்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்து கொடுங்கள். அதுபோல பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வத்தை உருவாக்கி கொடுங்கள். அவன் விரும்பும் போட்டிகள் டி.வி.யில் நடப்பதை பார்க்க வாய்ப்பு கொடுங்கள். முக்கியமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அக்கறை செலுத்தச் செய் யுங்கள்.

சிறுவர்-சிறுமியர்களிடம் பிடிவாதம் இருக்கத்தான் செய்யும். பெற்றோரின் அணுகு முறையால்தான் பிடிவாதம் கூடவோ, குறையவோ செய்யும். குழந்தை கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து விடக்கூடாது. குழந்தைகள் வளர வளர அதன் தேவைகள் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனால், தேவை யான பொருட்களை மட்டும் வாங்கிக் கொடுங்கள். ஒரே குழந்தையை வளர்க் கும் பலரும் `நாங்கள் சம்பாதித்து வைப் பது சேர்த்து வைத்திருப்பது எல்லாம் உனக்குத்தான். அதனால் நீ எதைக் கேட்டாலும் வாங்கித் தருவோம்’ என்ற மனோபாவத்தில் இருக்கிறார்கள். இது தவறான அணுகுமுறையாகும். குழந்தை களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies