சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை யுடிவி நிறுவனமும், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. யுவனின் இசையில் பக்கா கமர்ஷியல் எண்டர்டெயின்மெண்ட் படமாக தயாராகியுள்ள இப்படம் வருகிற 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று ரிலீசாகிறது.
சூர்யா- லிங்குசாமியின் முதல் கூட்டணி என்பதால் ரசிகர்களியே இப்படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் ரிலீசான முதல்நாள் எந்த ரசிகரும் அஞ்சானுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று திரும்பி சென்று விடக்கூடாது என்பதற்காக சென்னையில் மட்டும் சுமார் 37 தியேட்டர்களில் ‘அஞ்சான்’ ரிலீசாக உள்ளது.
இதுகுறித்து சென்னையில் இப்படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருக்கும் அபிராமி ராமநாதன் கூறியதாவது :
”அஞ்சானுக்கு முன்னால் நாங்கள் பட படங்களை விநியோகம் செய்திருக்கிறோம். முன்பெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆகிறதென்றால் 5 தியேட்டர்களுக்கு மேல் அப்படத்தை திரையிட மாட்டார்கள். அதை உடைத்தெறிந்து ‘சிவாஜி’ படத்தை சென்னை நகரில் 18 திரையரங்குகளில் ரிலீஸ் செய்தோம். அது மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது.
இப்போது அதை நிறைய பேர் பின்பற்ற தொடங்கியிருக்கிறார்கள்.
தற்போது அதே வெற்றிப்பாதையில் சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்தை 37 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப் போகிறோம். சென்னை நகரத்தில் உள்ள ரசிகர்கள் யாரும் ‘அஞ்சான்’ படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று திருட்டு விசிடியை நோக்கி போய்விடக்கூடாது. நடந்து போகிற தூரத்தில் ஒரு தியேட்டரில் படம் பார்க்கலாம். அதற்காகத்தான் 37 தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறோம்.
இந்த படத்தின் ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவை நேற்று இரவு ஆரம்பித்தோம். ஆரம்பித்த 2 மணி நேரத்தில் 5000 டிக்கெட் விற்று தீர்ந்தது. இது ஒரு மிகப்பெரிய சாதனை. இந்தப் படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.