BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 8 August 2014

ரஜினியின் சிவாஜியை மிஞ்சும் சூர்யாவின் அஞ்சான் !!!

சூர்யா-சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘அஞ்சான்’. இப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியுள்ளார். யுடிவி நிறுவனமும், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியாகவிருக்கிறது. சென்னையில் இப்படத்தின் விநியோகஸ்த உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார். சென்னையில் மட்டும் சுமார் 37 திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடவுள்ளார். இதுகுறித்து அபிராமி ராமநாதன் கூறும்போது,

‘அஞ்சான்’ படத்தின் சென்னை நகரத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ளோம். இதற்கு முன்னாள் பல படங்களுக்கு நாங்கள் விநியோக உரிமை பெற்றுள்ளோம். முன்பெல்லாம் ஒரு படம் வெளியாகிறதென்றால் 5 தியேட்டர்களுக்கு மேல் திரையிடமாட்டார்கள். அதை உடைத்தெறிந்து ‘சிவாஜி’ படத்தை சென்னை நகரில் 18 திரையரங்குகளில் வெளியிட்டோம். அது மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. இப்போது அதை நிறைய பேர் பின்பற்ற தொடங்கியிருக்கிறார்கள்.

தற்போது அதே வெற்றிப்பாதையில் நடந்து ‘அஞ்சான்’ படத்தை 37 தியேட்டர்களில் வெளியிடவிருக்கிறோம். சென்னை நகரத்தில் வாழும் யாரும் படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று திருட்டு விசிடியை நோக்கி போய்விடக்கூடாது. நடந்து போகிற தூரத்தில் ஒரு தியேட்டரில் படம் பார்க்கலாம். அதற்காகவே இத்தனை தியேட்டர்களில் வெளியிட்டுள்ளோம்.

இந்த படத்தின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவை நேற்று இரவு ஆரம்பித்தோம். ஆரம்பித்த 2 மணி நேரத்தில் 5000 டிக்கெட் விற்று தீர்ந்தது. இது ஒரு மிகப்பெரிய சாதனை. இந்தப் படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies