வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையம் வழியாக தங்கம் தொடர்ந்து
கடத்தப்பட்டு வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் கூட
அவர்கள் கண்ணில் மண்ணை தூவும் வகையில் நூதன முறையில் தங்கம்
கடத்தப்படுகிறது.
ஒரு சிலரின் உதவியுடனும் தங்கம் மற்றும் வெளிநாட்டு பொருட்கள் சென்னைக்கு வருகின்றன.
இந்த நிலையில் சுங்கத் துறை கமிஷனர் அகர்வால் அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சந்திரசேகர ராவ் புதிய கமிஷனர் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றது முதல் சுங்கத்துறை நடவடிக்கை தீவிரம் அடைந்தது.
இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக சோதனை செய்யப்பட்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 42 பேரிடம் கடத்தல் பொருட்கள் குறித்து விசாரணை மேற் கொள்ளப்பட்டது.
சட்டத்துக்கு விரோதமாக அவர்கள் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள், வாசனை திரவியங்கள் நிர்ணயித்த அளவை விட அதிகமாக கொண்டு வந்ததால் அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு கோடியே 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையில் ஒரே நாளில் அதிக அளவு அபராதம் விதித்தது இதுவே முதல் முறையாகும்.
சென்னை உள்நாட்டு விமான விமான நிலையத்தின் வருகை பகுதியில் உள்ள லிப்ட் கூரை இன்று பகல் 12 மணி அளவில் திடீரென சரிந்து விழுந்தது. அருகில் இருந்த பயணிகள், ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். சென்னை விமான நிலையத்தில் இது 24–வது முறையாக நடந்த சம்பவம்.