குடியா என்னும் பெண் பீஹார் மாநிலத்தில் உள்ள ரயிலில் 6 வயதாக இருந்த போது காணாமல் போனார். அது பாட்னாவில் இருந்து கவுஹாத்திக்கு செல்லும் ரயில். அப்போது தனது மாமாவுடன் அந்த ரயிலில் சென்று கொண்டு இருந்தார். அவர் உணவு வாங்குவதற்காக ரயிலில் இருந்து இறங்கினார். ஆனால் அவரால் சரியான நேரத்தில் ரயிலை பிடிக்க முடியவில்லை. இதனால் குடியா தனிமையானார். அவளுக்கு அவள் யார் என்பதே தெரியவில்லை. எனவே அங்கு உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அவரிடம் கேட்டதற்கு , தனது மாமா பாட்னாவில் தன்னுடைய வீட்டிற்கு முன் உள்ள ரயில்வே கிராசிங்க்கு அருகில் இருக்கும் பிஸ்கட் தொழிற்சாலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்' என்பது மட்டுமே நினைவில் உள்ளதாக கூறியுள்ளார்.
இப்போது அவருக்கு 23 வயது ஆகிறது. அசாம் மாநிலத்தில் குழந்தை பாதுகாப்பு சமூகத்தின் அதிகாரியான நீலாக்ஷீ சர்மா, குடியாவின் பெற்றோரை கண்டுபிடிக்க முடிவு எடுத்து முயற்சி செய்தார். இதற்காக தீவிரமாக தேடினார். ஆனால் அவரால் முடியவில்லை. இதனால் கூகுளில் தேடினார். அவரது கடின உழைப்பிற்கு பலன் கிடைத்தது. குடியாவின் மாமாவின் பிஸ்கட் தொழிற்சாலையின் நம்பர் கிடைத்தது. இதன் மூலம் அவளது பெற்றோர்களை கண்டுபிடிக்க முடிந்தது. பிறகு அவர் தனது பெற்றோருடன் இணைந்தார். அவள் அரசாங்க அதிகாரிக்கும் மற்றும் கூகுள் தேடலுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.