BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 31 December 2024

Health: விருந்துக்குப் போறீங்களா? இத ஃபாலோ பண்ணலாமே...

''விருந்தும் விருந்தோம்பலும் தமிழர் மரபில் கலந்தவை. பண்டிகை, திருவிழா, திருமண விழாக்களில் மட்டுமே விருந்து என்ற நிலை இன்று மாறிவிட்டது. பஃபே எனச் சொல்லப்படும் மாடர்ன் விருந்து பிரபலமாகிவிட்டது. காலை, மதியம், இரவு என எந்த நேரமும் பஃபே எளிதில் கிடைக்கிறது. பொதுவாக, இந்த வகை விருந்துகளில் பலதரப்பட்ட உணவுகள் இருக்கும் என்பதால், எதில் இருந்து தொடங்குவது என்பதில் இருந்து, எதைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டும் என்பது வரை கவனத்துடன் இருந்தால், ஆரோக்கியத்துக்கு எந்தக் குறைவும் வராது'' என்கிற டயட்டீஷியன் வினிதா கிருஷ்ணன், அதுபற்றி விரிவாக பேசுகிறார் இங்கே.

உணவு...

மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்த பழக்கம்தான் பஃபே விருந்து. ஆனால், ஹெல்த்தியாகச் சாப்பிடுவது எப்படி என இன்னும் நாம் கற்றுக்கொள்ளவில்லை. பஃபேவில் உணவு வகைகளைக் கண்டதும் ஓடிச்சென்று எல்லா உணவுகளையும் எடுப்பது தவறு. சூப், ஸ்டார்ட்டர், பிரியாணி, அசைவ உணவுகள் என எதுவாக இருந்தாலும் அளவாகச் சாப்பிட வேண்டும். எண்ணெயில் வறுத்த, எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள், அதிக இனிப்புச்சுவைகொண்ட கேக் முதலானவற்றைக் குறைவாகச் சாப்பிடுவதுதான் நல்லது. சாலட்கள், ஆவியில் வேகவைத்த உணவுகள், நீராவியில் வேகவைத்த சிக்கன் போன்றவற்றைச் சற்று கூடுதலாகச் சாப்பிடலாம். குறைந்தது அரை மணி நேரம் முதல், இரண்டு மணி நேரம் வரை உட்கார்ந்து, நன்றாக ரசித்துச் சுவைத்து மெள்ள மெள்ள உணவை விழுங்க வேண்டும்.

முன்பு எல்லாம், பலரும் விருந்துக்குச் செல்வதற்கு முந்தைய நாளில் இருந்தே அதற்குத் தயாராகிக்கொண்டு இருப்பார்கள். விருந்தை ஒருகை பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். சிலர், மதிய விருந்துக்குச் செல்வதாக இருந்தால், காலை உணவைத் தவிர்த்துவிடுவார்கள், இது தவறு. என்னதான் அமர்க்களமான விருந்தாக இருந்தாலும் அளவோடு சாப்பிட வேண்டும் என்ற மனஉறுதியைக் கடைப்பிடிக்க வேண்டும். காலை உணவையும் இரவு உணவையும் எந்தக் காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது. மதிய விருந்துக்குச் செல்வதாக இருந்தால், நான்கு மணி நேரத்துக்கு முன்னர், எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை அளவாகச் சாப்பிடுவது நல்லது. இரவு விருந்துக்கு ஆரோக்கியமான இளம் வயதினர் மதிய உணவைத் தவிர்த்து, ஏதோ ஒரு ஜூஸ், பழம் ஆகியவற்றைச் சாப்பிட்டுவிட்டு விருந்துக்குச் செல்வதில் தவறு இல்லை. உடல்பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னை உள்ளவர்கள், எந்த வேளை உணவையும் தவிர்க்கக்கூடாது.

சூப்

சூப் பசியைத் தூண்டும் ஆற்றல்கொண்டது. பஃபே, விருந்துகளில் பங்கேற்கும்போது, சாப்பிடச் செல்வதற்கு குறைந்தது அரை மணி நேரத்துக்கு முன்னதாக சூப் பருகினால்தான் பலன் கிடைக்கும். வேகவேகமாக சூப்பைப் பருகிவிட்டு, உடனடியாக மற்ற உணவுகளையும் சாப்பிட்டால், சூப் குடிப்பதில் எந்தவிதப் பயனும் கிடையாது.

பஃபே போன்ற விருந்துகளில் பங்கேற்கும்போது, பிளேட்டில் கவனம் செலுத்துவது அவசியம். எப்போதுமே சிறிய பிளேட்டாக எடுத்துக்கொள்ளுங்கள். பஃபேயில் இருக்கும் எல்லா உணவு வகைகளையும் பிளேட்டில் எடுத்துக்கொண்டு சென்று, பின்னர் அமர்ந்து சாப்பிட வேண்டாம். எந்த உணவை விரும்புகிறீர்களோ, அவற்றை மட்டும் பிளேட்டில் அளவாகவைத்து, பொறுமையாகச் சாப்பிட வேண்டும். பஃபேவில் வேகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வீணாக்காமல் சாப்பிடுவதுதான் முக்கியம். எத்தனை முறை வேண்டுமானாலும் விரும்பிய உணவை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதால், தட்டையும் வயிற்றையும் அளவாக நிரப்ப வேண்டும்.

தண்ணீர்

தண்ணீர் அருந்தினால் அதிகமாகச் சாப்பிட முடியாதோ என, பலர் தண்ணீர் அருந்துவது இல்லை, இது தவறு. எப்போது எல்லாம் தாகம் எடுக்கிறதோ அப்போது எல்லாம் அளவாக, சீரான இடைவெளியில் தண்ணீர் பருகிக்கொண்டே இருப்பது அவசியம். தண்ணீருக்குப் பதில் கோலா பானங்கள், சோடா அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

எத்தனையோவிதமான விருந்துகள் இருந்தாலும், தமிழர் விருந்துதான் செரிமானத்துக்கு ஏற்றது. முதலில் சிறிது பாயசம் போன்ற இனிப்பு வகைகளைச் சாப்பிட வேண்டும். பின்னர் அரிசி, பருப்பு, நெய், ரொட்டி போன்றவற்றைச் சாப்பிட வேண்டும். பிறகு, கலவை சாதம், மீண்டும் சிறிதளவு இனிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும், பின்னர் ரசம், அப்பளம், சாலட், தயிர், ஐஸ்க்ரீம் என விருந்தை முடிப்பதுதான் சரி. காய்கறிகளை மட்டும் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

சாப்பாடு

பஃபே விருந்துகளில் நிறைய சாப்பிட்டால், எக்கச்சக்க கலோரி உடலில் சேர்ந்துவிடும். எனவே, அடிக்கடி பஃபேயில் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரு பஃபே விருந்துக்கும் இன்னொரு பஃபே விருந்துக்கும் இடையில் இரண்டு வாரங்கள் முதல் நான்கு வாரங்கள் வரை இடைவெளி இருப்பது நல்லது. பஃபேவில் பங்கேற்கும்போது, அந்த விருந்துக்கு முந்தைய வேளையும், அடுத்த வேளையும், வழக்கமாகச் சாப்பிடும் அளவில் பாதி அளவு மட்டும் சாப்பிடுங்கள். நிறைய உணவுகளை உண்டிருந்தால், அடுத்த இரண்டு நாள்களுக்குக் கூடுதல் உடற்பயிற்சிகளைச் செய்து, உடலில் சேர்ந்த தேவையற்ற கலோரிகளை எரிப்பது நல்லது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies