மியூசிக் அகாடமி வழங்கும் பெருமைமிகு விருதான சங்கீத கலாநிதி விருதை, வாய்ப்பாட்டுக் கலைஞர் சஞ்சய் சுப்பிரமணியன் இந்த ஆண்டு பெறுகிறார். மியூ சிக் அகாடமியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் நேற்று ஒருமன தாக இதற்கான தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞ ரான சஞ்சய் சுப்பிரமணியன், தற்கால கர்நாடக சங்கீத உல கிற்கு முன்னோடியாகவும், வழி காட்டியாகவும் திகழ்கிறார். நாற்பத் தேழு வயதான இவர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், முசிறி சுப்பிரமணிய ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், செம்மங்குடி நிவாச ஐயர், ஜி.என். பால சுப்பிரமணியம், எம்.எல். வசந்த குமாரி, எம்.பாலமுரளி கிருஷ்ணா உள்ளிட்ட சிலர் போல இள வயதி லேயே இந்த விருதினை பெறுகிறார் என்பது மேலும் சிறப்பு சேர்க்கிறது. மியூசிக் அகாடமியில் 2016 ஜனவரி 1-ம் தேதியன்று நடைபெறவுள்ள `சதஸ்’ நிகழ்ச்சியின்போது இந்த விருது சஞ்சய் சுப்பிரமணியனுக்கு வழங்கப்படும்.
வாய்ப்பாட்டுக் கலைஞர் மைசூர் ஜி.என்.நாகமணி ஸ்ரீநாத் மற்றும் வாத்தியக் கலைஞர் டி. எச். சுபாஷ் சந்திரன் ஆகிய இருவருக்கும் சங்கீத கலா ஆச்சாரியா விருது வழங்கப்படும். நாதஸ்வர வித்வான் சேஷம் பட்டி சிவலிங்கம் மற்றும் வீணை கமலா அஸ்வத்தாமா ஆகிய இருவருக்கும் டி.டி.கே. விருது வழங்கப்படுகிறது. `மியூசிகால ஜிஸ்ட்’ விருது டாக்டர் கெளரி குப்புசாமிக்கு வழங்கப்படும். வய லின் இசைக்கான பாப்பா வெங்கட ராமையா விருதை எம்.எஸ். மணி பெறுகிறார்.
இந்த விருதுகள், 2016 ஜனவரி 1- ம் தேதி நடைபெறவுள்ள `சதஸ்` நிகழ்ச்சியில் வழங்கப்படும்.
நாட்டியக் கலையில் மிகச் சிறந்தவரும், ஆராய்ச்சியாளரு மான அலர்மேல்வள்ளி, நாட்டிய கலா ஆச்சாரியா விருது பெறுகிறார். இந்த விருது 2016 ஜனவரி 3-ம் தேதியன்று, நாட்டிய விழாவின், தொடக்க நாளன்று வழங்கப்படும்.மேலும், வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல், 2016 ஜனவரி 1-ம் தேதி வரை நடைபெறவுள்ள மியூசிக் அகாடமியின் 89வது ஆண்டு மாநாட்டுக்கு சஞ்சய் சுப்பிரமணியன் தலைமை ஏற்கிறார்.