BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 26 June 2015

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம்: வட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு



நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் குஜராத், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சற்று தாமதாக 5-ம் தேதி தொடங்கியது. இப்போது தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. மேற்கு ராஜஸ்தான் பகுதியைத் தவிர நாட்டின் மற்ற அனைத்துப் பகுதியிலும் பருவ மழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. டெல்லியில் நேற்று பருவமழை தொடங்கியது.
கரை புரளும் ஜீலம் நதி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஜீலம் நதியில் அபாய கட்டத்துக்கு மேல் வெள்ளம் பாய்கிறது. இதனால் அனந்த்நாக் மற்றும் புல்வாமா உள்ளிட்ட கரையோர மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஜீலம் நதி கரைபுரளுவதால் நை பஸ்தி, டகியா, பேரம்போரா, ஷம்சிபோரா, ஹசன்போரா உள் ளிட்ட அனந்த்நாக் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள், பாலங் கள் தேசமடைந்துள்ளன. இதனி டையே, அடுத்த 48 மணி நேரத் துக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்திலும் நேற்றுமுன்தினம் இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட கோயில்களுக்கான புனித யாத்திரை நேற்று பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே மலை மாவட் டங்களில் அடுத்த 48 மணி நேரத் தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், கேதார்நாத் துக்கு சென்ற பக்தர்கள் சோன் பிரயாக் பகுதியில் தடுத்து நிறுத் தப்பட்டுள்ளதாக ருத்ரபிரயாக் மாவட்ட ஆட்சியர் ராகவ் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இதுபோல் நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத்துக்கு சென்ற பக்தர்கள் ஜோஷிமத் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். உத்தரகாசி பகுதியிலும் மழை பெய்வதால் கங்கோத்ரி, யமுனோத்ரி யாத்திரையும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies