திருச்சி சுங்கத் துறை அலுவலகத் தில் தங்கக் கட்டிகள் மாயமான வழக்கு தொடர்பாக, ஓய்வுபெற்ற சுங்கத் துறை அலுவலர்கள் உட்பட 12 பேர் மீது வழக்கு தொடர சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
திருச்சி சுங்கத் துறை அலுவலகத்தில் தங்கக் கட்டிகள் மாயமானது தொடர்பாக, சிபிஐ சென்னை மண்டலக் கண் காணிப்பாளர் பார்த்தசாரதி உத்தரவின்பேரில், டிஎஸ்பி கண்ணன் தலைமையிலான குழு வினர் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களாக இக் குழுவினர் நடத்திய விசாரணை யில், பாதுகாப்பு பெட்டகத்தி லிருந்த 34 கிலோ தங்கம், ரூ.17.5 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் மாயமாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
திருவாரூர், வேதாரண்யம், முத்துப்பேட்டை பகுதிகளில் தங்கம் கடத்தலில் ஈடுபட்டுவரும் கடத்தல்காரர்களைக் கண் காணித்த சிபிஐ அலுவலர்கள், அவர்களது செல்போன் எண்களை தொடர்ந்து ஆய்வு செய்ததில், கடத்தல்காரர்களுக்கும், திருச்சி சுங்கத் துறை அலுவலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருந்ததை கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 1980-85-ம் ஆண்டுகளில் இலங்கையிலிருந்து திருச்சி வழியாக தமிழகத்துக்கு அதிக அளவில் தங்கம் கடத்தி வரப் பட்டுள்ளது. இதற்கு, சுங்கத் துறை அலுவலர்களும் உடந்தையாக இருந்ததையறிந்த சென்னை மண்டல சுங்கத் துறை நிர்வாகம், திருச்சியில் பணியாற்றிய அலு வலர்கள் பலரை இடமாற்றம் செய்துள்ளனர். மேலும், புதுச்சேரியில் பணியாற்றி வந்த பெண் அதிகாரி திருச்சி சுங்கத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். அதற்கு பிறகும் கடத்தல் தொடர்ந்துள்ளது.
மேலும், மகாபலிபுரம் முதல் கோடியக்கரை வரை கடல் மார்க்கமாக கடத்தப்பட்ட தங்கம் மற்றும் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதிலும், முறையாக கணக்கீடு செய்யா மலும், குற்றவாளிகளைத் தப்பவிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்துள்ளதால், திருச்சி சுங்கத் துறையில் பணியாற்றிய பல அலுவலர்களை சிபிஐ குழுவினர் கண்காணித்தனர். இதில், 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களது சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்காக, கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட தேசிய மாதிரி ஆய்வு நிறு வனம் (என்எஸ்எஸ்ஓ), குறிப் பிட்ட 8 அதிகாரிகளின் வருமானத் தையும், தற்போதுள்ள சொத்து மதிப்பையும் ஆய்வுசெய்து அறிக்கை கொடுத்துள்ளது.
மேலும், கடத்தல்காரர்களிட மிருந்து பறிமுதல் செய்யப் படும் தங்கத்தை முழுமையாக அலுவலகத்தில் சமர்ப்பிக்காமல், குறைந்த அளவு மட்டுமே சமர்ப்பித்து, அதற்கு வழக்கு நடத்தியுள்ளதும் கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இதுவரை முறை கேடு, மோசடி தொடர்பாக 12 பேரிடம் சிபிஐ குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் களில் 8 பேர் ஓய்வுபெற்ற சுங்கத் துறை அலுவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 4 பேர் தற்போது பணியிலிருக்கும் அதிகாரிகள் என்றும், அனைவர் மீதும் சில நாட்களில் மதுரையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படலாம் எனவும் தெரிகிறது.
இதுகுறித்து திருச்சி சுங்கத் துறை ஆணையர் ஜானி கூறும்போது, “இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருவதால், விசாரணையில் நான் தலையிட முடியாது. ஏற்கெனவே இங்கு பணியாற்றியவர்கள் விவரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என்றார்.