அகமதாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த போது பார் பெண்ணுடன் நடனம் ஆடிய சப் இன்ஸ்பெக்டருக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு, குஜராத் மாநிலத்தின் சூரத்தில் உள்ள திந்தோலி பகுதியில் ”விஷ்வகர்மா பூஜன்” நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக சி.சோலங்கி என்ற பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் சென்றிருந்தார்.
அங்கு அவர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார் பெண்ணுடன் நடனம் ஆடியுள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைதளமான வாட்ஸ் அப்பில் வேகமாக பரவியது, இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதற்கட்ட விசாரணை அறிக்கையை சூரத் நகர காவல் ஆணையரிடம் பொலிசார் இன்று சமர்பிக்கவுள்ளனர். Gujarat policeman seen dancing with woman in viral video, faces action