BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 9 December 2014

பழிவாங்கப்படும் பேராசிரியை... கல்லூரி மாணவிகள் போராட்டம், கடலூரில் பரபரப்பு.

கடலூரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவிகள் நேற்று(8/12/2014) தங்களது கல்லூரி பேராசிரியை வேறு கல்லூரிக்கு இடம் மாற்றப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி பச்சையப்பன் அறக்கட்டளையினால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த கல்லூரியில் கணிதத்துறை பேராசியராகவும் அந்த துறைத்தலைவராகவும் இருப்பவர் டாக்டர் சாந்தி. இவர் திருவள்ளுவர் பல்கலை கழகத்தில் கல்லூரி பேராசிரியர்களின் பிரதிநிதியாக சிண்டிகேட் உறுப்பினராகவும் இருக்கின்றார்.

இவர் சமீபத்தில் கந்தசாமி நாயுடு கல்லூரியில் இருந்து காஞ்சிபுரம் பச்சையப்பா ஆண்கள் கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டார், இதனால் திருவள்ளுவர் பல்கலை கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் அந்தஸ்தை இந்த பேராசிரியர் இழப்பார் என தெரிகிறது. இதை அடுத்து சென்ற வாரம் அசோசியேசன்ஸ் ஆஃப் யுனிவர்சிட்டி டீச்சர்ஸ் விடுத்த அறிக்கையில் பச்சையப்பா அறக்கட்டளை, மற்றும் கல்லூரி நிர்வாகத்தில் நடந்த முறைகேடுகளை பேராசிரியை டாக்டர் சாந்தி  வெளிக்கொணர்ந்ததால் பழிவாங்கும் நடவடிக்கையாக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் திருவள்ளுவர் பல்கலை கழகத்தில் நடைபெற்ற நிர்வாக சீர்கேடுகளையும் பேராசிரியை டாக்டர் சாந்தி கண்டித்ததாகவும் தெரியவந்துள்ளது, பல்கலை கழகத்தின் தேர்வுக்கட்டணத்தை உயர்த்தும் முடிவை பேராசிரியை சாந்தி கடுமையாக எதிர்த்துள்ளார், இதனால் கல்லூரி முதல்வர், பச்சையப்பா அறக்கட்டளை நிர்வாகம்,  திருவள்ளுவர் பல்கலை கழகம் என முத்தரப்பினரும் பேராசிரியை சாந்தியை எதிர்த்துள்ள‌னர்.

கல்லூரி முதல்வர் டாக்டர் பட்டம் பெறாதவர், அவர் கடந்த ஆட்சியில் முதல்வராக நியமிக்கப்பட்ட போதே டாக்டர் பட்டம் பெறாத அவருக்கு மேல் சீனியர் பேராசிரியர்கள் இருக்கும் போது  இவரை எப்படி முதல்வராக நியமிக்கலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும் துறைத்தலைவர்கள் மாணவிகளுக்கு வழங்கிய மதிப்பெண்களை கல்லூரி முதல்வர் திருத்தியதாகவும் இது குறித்து  பேராசிரியை சாந்தி பல்கலைக்கழகத்தில் புகார் அளித்திருந்தார், பல்கலைகழகத்தின் விசாரணை முடிவில் குற்றச்சாட்டி உண்மை இருந்ததாகவும் இதனால் கல்லூரி முதல்வர் 5 ஆண்டுகாலத்திற்கு தேர்வு பணிகளில் முதல்வர் மல்லிகா சந்திரன் ஈடுபடக்கூடாதென்று பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு காரணம் பேராசிரியை சாந்திதான் என்று கருதிய முதல்வர் மல்லிகா சந்திரன் பேராசிரியை சாந்தியை  இடமாற்றம் செய்வதில் முனைந்தார் என்று தெரிவித்தனர்.



இடமாற்றத்திற்கு நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கிய பேராசிரியை டாக்டர் சாந்தி கந்தசாமி நாயுடு கல்லூரிக்கு சென்றுள்ளார், கல்லூரியில் நுழைந்து கையெழுத்து போட முடியாத வண்ணம் காவல்துறையை கொண்டு தடுத்துள்ளார் கல்லூரி முதல்வர் என்று கந்தசாமி நாயுடு கல்லூரி பேராசிரியைகள் சிலர் தெரிவித்தனர். மேலும் பேராசிரியை சாந்தியிடம் கல்லூரியில் யாரும் பேச இயலாதவாறு தடுக்கப்பட்டதாகவும் பேராசிரியை சாந்தி கல்லூரியினுள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் பேராசிரியை சாந்திக்கு தண்ணீர் தரகூட யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் அந்த கல்லூரி பேராசிரியைகள்  தெரிவித்தனர்.

பெண்கள் கல்லூரியில் நிற்கும் இவர் யார்?

பேராசிரியை இடமாற்றத்தை எதிர்த்து கல்லூரி பேராசிரியர்கள் தரப்பு சென்னையில் பச்சையப்பா அறக்கட்டளையில் உள்ளிருப்பு போராட்டங்கள் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த வேளையில் புதிய திருப்பமாக நேற்று  கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவிகள் இடம் மாற்றம் செய்யப்பட்ட பேராசிரியைக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தனர். கல்லூரி மாணவிகள் சென்ற வாரமே போராட்டத்தில் குதிக்க தயாரானதாகவும் காவல்துறையினர் தடுத்ததாகவும் தெரியவந்துள்ளது, கல்லூரி  மாணவிகள் போராட ஆரம்பித்து கல்லூரியை விட்டு வெளிவர முயன்றபோது காவல்துறையினர் கல்லூரி கதவை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது, அங்கே செய்தி சேகரிக்க சென்றிருந்த செய்தியாளர்கள் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்ததால் செய்தியாளர்கள் இதற்கு காவல்துறையினரிடம் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பேராசிரியை இடமாற்றம் குறித்தும் இந்த பிரச்சினையில் தலையிட்டு நீதி வழங்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் அசோசியேசன்ஸ் ஆஃப் யுனிவர்சிட்டி டீச்சர்ஸ் அமைப்பு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்கள். அந்த மனு இந்த இணைப்பில் http://www.files.com/set/5485ace10f71f

கல்லூரி முதல்வர் தரப்பினரோ கல்லூரியின் நன்மைக்காகவே பேராசிரியை சாந்தியை இடமாற்றம் செய்ததாக கூறிவருவதாக தெரிகின்றது. ஆனால் கல்லூரி மாணவிகளே பேராசிரியை சாந்தி இடமாற்றத்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்தது பரபரப்பை கிளப்பியுள்ள‌து.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies