சமீபத்தில் டிஸ்டிபியூட்டர் பிரச்சனைகளை கேள்வி பட்டேன். அதுக்கும் எனக்கும் சம்மந்தமே கிடையாது. ஆனால் வேறு சிலர் மூலமாக நான் விசாரித்ததில் அவர்கள் யார் என்றே தெரியாது. சில டிஸ்டிபியூட்டர்கள் பணம் பாக்கி வைத்துள்ளனர் என்று கூறுகின்றனர்.
நான் சிட்டி டிஸ்டிபியூட்டர்களிடம் கூட விசாரித்தேன், அவர்கள் இன்று இருந்து வரும் செவ்வாய்க்கிழமை வரை புக்கிங் புல் என்று கூறுகிறார்கள்.
மேலும் ஒருவர், தேர்வுகள் அப்போ படம் ரிலீஸ் செய்தால் எப்படி வசூல் வரும் என்று கூறுகின்றார். ரஜினி அவர்களின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிடுவதற்காக நாங்கள் அப்படி கடுமையாக பணிபுரிந்தோம். இதுதான் என்னுடைய பணி.
படம் இயக்கியதோடு என் பணி முடிந்தது, இதுபோன்ற தகவலை தயாரிப்பாளர்களிடம் கேட்டால் முழுமையான விவரம் தெரியும்.
படம் ரிலீஸாகி இப்போது தான் இரண்டாவது வாரம் தொடங்க இருக்கிறது. இதற்குள் வசூல் ஆகவில்லை என்று எப்படி சொல்வார்கள். 100 நாட்கள் ஓடி வசூல் வரவில்லை என்று கூறினால் ஒரு நியாயம் உண்டு. இதற்குள் எப்படி அவர்கள் இதுபோன்ற பேச்சுகளை கூறலாம் என்று கடுமையான பதிலை அளித்துள்ளார் கே.எஸ். ரவிக்குமார்.