ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய வீரர் புவனேஷ் குமார் தனது கணக்கில் புதிய சாதனை படைத்து உள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அவர் 2 விக்கெட் மட்டும் தான் வீழ்த்தினார். ஆனால் மிக சிறப்பாக ரன்களை கட்டுபடுத்தினார். அதற்கு பயனாக முதல் முதலாக பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் பத்து இடத்துக்குள் வந்து விட்டார். தற்போது 7 வது இடத்தில் உள்ளார். ஜடேஜா 5 வது இடத்தில் இருந்து 6 வது இடத்துக்கு சென்றார். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கோலி 2 வது இடத்துக்கு முன்னேறினார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்தது அவரது முன்னேற்றத்துக்கு காரணம் ஆகும். இந்திய கேப்டன் தோனி தனது 6 வது இடத்தை தக்க வைத்து கொண்டார். சுரேஷ் ரெய்னா 3 இடங்கள் முன்னேறி 15 வது இடத்துக்கு வந்தார். அணி தரவரிசையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் இணைந்து 2 வது இடத்தில் உள்ளது.