மிஸோரம் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் மிஸோரமில் நடைபெற்று வருகிறது. இதில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பெத்லஹாஎம் வெங்த்லங் அணி மற்றும் சன்மாரி வெஸ்ட் அணிகள் மோதின. இதில் பெத்லஹேம் அணியை சேர்ந்த 23 வயது பீட்டர் என்னும் வீரர் அந்த அணிக்காக கோல் அடித்தார்.
இந்த கோல் அடித்த சந்தோஷத்தை கொண்டாடுவதற்காக அந்தரத்தில் பறந்து பல்டி அடித்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் அவரது முதுகுதண்டு உடைந்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அந்த இடம் பரபரப்பு ஆனது. உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். ஆனால் அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெற்றியை கொண்டாடிய போது உயிர் போனதா என பலரும் திகைப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
எல்லா கால்பந்து வீரர்களும் கோல் அடித்து விட்டு வெற்றியை ஒவ்வொரு விதமாக கொண்டாடுவார்கள். அதிலும் ஆபத்து இருக்கிறது என இந்த சம்பவம் விளக்கி உள்ளது. எனவே நீங்களும் கால்பந்து அல்ல எந்த விளையாட்டு விளையாடும் போதும் கவனமாக விளையாடுங்கள்.