சென்னையில் பிறந்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் ஒருவர் நோபள் பரிசிற்கான போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . இவர் தகவல்களைப் பாதுகாப்பதற்காக கண்டுபிடித்த பெர்ரோ மேக்னடிக் பொருட்களின் ஆராய்சிக்காக தகுதி பெற்றார் .
அவரின் பெயர் ராமமூர்த்தி ரமேஷ் . அவர் தனது இளங்கலைப் படிப்பை வேதியியல் துறையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்தார் . தந்து முதுகலைப் பட்டத்தை பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் முடித்தார் . கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார் . பின்னர் அங்கே பெர்ரோ மேக்னடிக் பொருட்களின் ஆராய்சியில் ஈடுபட்டார் .
நோபள் பரிசு வழங்கும் அமைப்பு போட்டியாளர்களின் பெயர்களை வெளியிடுவது இல்லை . ஏன் அந்த போட்டியாளர்களுக்கு கூட அவர்கள் தெரிவிப்பதில்லை . ஆனால் தாம்சன் ரெய்ட்டரின் அறிவுசார் சொத்து மற்றும் அறிவியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த பட்டியலை 2002 ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகின்றனர் .