இன்று ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது . அதன் தீர்ப்பு மாலை வந்தது. அதில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விட்டதாக முதலில் செய்திகள் வந்தது. எண்டிடிவி முதற்கொண்டு எல்லா சேனல்களிளும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வந்து விட்டது என பிளாஷ் நியூஸ் வந்தது. இதனை பார்த்தவுடன் தமிழகம் முழுவதும் அதிமுக வினர் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.
எல்லா இடங்களிளும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையர் கோவில் பகுதியில் உள்ள சொர்ணகாளிஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக மராமத்து பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதற்காக கோயிலை சுற்றி ஓலை தட்டியால் அடைக்கப்பட்டிருந்தது. அப்போது அதிமுகவினர் அங்கு பட்டாசு வைத்து கொண்டாடினர். அப்போது அந்த பட்டாசில் இருந்த தீ பொறிகள் கோவில் ஒலையின் மீது பட்டு அங்கு தீ பிடித்து எரிய ஆரம்பித்தது.
அப்போது அந்த பகுதியில் மழை பெய்ததால் பெரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டது. அதன் பிறகு அதிமுகவினர் கோவிலுக்கு தீ வைத்து விட்டதாக இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது;