நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை எதிர்க்கும் விதமாக தனக்கு அளிக்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தை வாங்க மறுத்தார் . அதனை தன்னுடன் மோதிய சக வீராங்கனையிடம் ஒப்படைத்து விட்டார் . பின்னர் ஒரு நாள் கழித்து அவர் இது குறித்து ஆசிய ஒலிம்பிக் அமைப்பிடம் மன்னிப்பு கேட்டார் .
ஆனால் சர்வதேச பாக்சிங் அமைப்பு இவரை சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து தடை செய்துள்ளது . அவர்கள் தெரிவிக்கும் வரை இவரால் பங்கு கொள்ள முடியாது . இவருடைய பயிற்சியாளர்களையும் தடை செய்துள்ளனர் . இதனால் இவரால் அடுத்த மாதம் நடக்க உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கு கொள்ள முடியாது .
இது குறித்து சரிதாவின் கணவர் கூறுகையில் நாங்கள் பதில் கடிதம் தயாரித்துக் கொண்டு இருக்கிறோம் . இந்த பிரச்சனை விரைவில் முடிவுபெறும் என்று தெரிகிறது என்றார் .