சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு உள்ள ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் பெங்களூரில் உள்ள அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மனு செய்து இருந்தார்கள். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. அரசு வழக்கறிஞர் பவானி சிங் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத போதும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. அரசு வழக்கறிஞர் ஏன் திடீர் என பல்டி அடித்தார் என தெரியவில்லை.
இது குறித்து அவரிடம் கேட்ட போது, 29 ஆம் தேதி ஜெயலலிதா ஜாமீன் மனு தாக்கல் செய்த போது தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையோடு 4 வருட சிறை தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனால் தான் அப்போது அதனை எதிர்த்தேன். இப்போது ஜாமீன் மட்டும் கேட்டதால் எந்த எதிர்ப்பும் பதிவு செய்யவில்லை என விளக்கம் கொடுத்தார். நிபந்தனைகளுடன் நீதிபதி தரும் ஜாமீனை ஏற்று கொள்ள தயார் என ராம் ஜெத்மாலனி வாதாடியது தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்வதற்கு முக்கிய காரணம் என்றார்.