போபர்ஸ் நாளிதழ் உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டது . இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ள ஒரே வீரர் , இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி மட்டுமே . இந்த பட்டியலின் முதலிடத்தில் இருப்பது பிரபல கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் .
தோனி இந்த பட்டியலில் 20 மில்லியன் டாலர்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது . ஆனால் இது சென்ற வருடத்தின் 21 மில்லியன் டாலரை விட குறைவு .
போபர்ஸ் நாளிதழ் கணக்கின் படி தோனி பேட் ஸ்பான்சர்ஷிப் ஆக ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ் மற்றும் அமிட்டி பல்கலைக்கழகத்துடன் 4 மில்லியன் டாலர் ஒப்பந்தம் போட்டுள்ளது . ரீபோக்கிடம் 1 மில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்துள்ளார் .
போபர்ஸ் நாளிதழ் வெளியிட்ட பட்டியல் !!
லெப்ரான் ஜேம்ஸ் - 37 மில்லியன் டாலர்
டைகர் வுட்ஸ் - 36 மில்லியன் டாலர்
பெடரர் - 32 மில்லியன் டாலர்