அரபிக் கடலில் உருவான நிலோஃபர் புயல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தப் புயல், குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள நலியா கிராமம் அருகே வரும் 31ஆம் தேதி கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குஜராத்தில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் 2ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு அவசர ஆலோசனை: நிலோஃபர் புயல் காரணமாக குஜராத் மாநிலத்தில் முன்கூட்டி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு திங்கள்கிழமை அவசர ஆலோசனை நடத்தியது.