தமிழர்களாகிய கமல், விஜய் படங்களுக்கு மட்டும் தமிழகத்தில் பிரச்சனையா ???
இளையதளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கத்தி. இந்த படம் தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த துப்பாக்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் கத்தி படத்துக்கு ஆரம்பத்தில் இருந்து பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. எல்லாத்துக்கும் முக்கிய காரணம் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தான். அந்த நிறுவனம் பல இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷேவுக்கு சொந்தகாரர்களின் நிறுவனம் என்பதால் தான்.
இதற்காக தான் ஆரம்பத்தில் இருந்து பிரச்சனை செய்து வருகிறது. அதனால் படத்தை தீபாவளிக்கு வெளிவர விடாமல் தடுத்து வருகிறது. அவர்களது பிரச்சனை லைகா தான் என்றால் இதற்கு முன்னர் அவர்கள் இசைஞானி இளையராஜாவின் இசை கச்சேரியை தயாரித்து உள்ளார்கள். லைகா நிறுவனத்தின் முதல் படமே சேரன் நடித்த 'பிரிவோம் சந்திப்போம்' தான். அப்போது எந்த பிரச்சனையும் வரவில்லை. மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஒரு ஸ்பான்சராக இருந்து உள்ளார்கள். அப்போது எல்லாம் ஏன் அமைதியாக இருந்தார்கள். இதில் இருந்தே தெரிகிறது அவர்கள் பிரச்சனை விஜய் தான் என்று. பல இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த போது அமைதியாக வேடிக்கை பார்த்து விட்டு இப்போது வந்து அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திருமாவளவன் சொல்கிறார், லைகா நிறுவனம் தயாரித்து இருப்பதால் கத்தி படத்தை தடை செய்ய வேண்டும் என்று . தமிழர்களுக்கு ஆதரவாக இவர் இருக்கிறார் என்பதை காட்டுவதற்காக இப்படி செய்கிறார்
. இலங்கை சென்று ராஜபக்ஷேவுடன் கை குலுக்கி கட்டிபிடித்த போது இவரது தமிழர் பாசம் எங்கே போன்து. லைகா என்னும் ஒரு வார்த்தையை போடுவதால் எந்த பிரச்சனையும் வரபோவது இல்லை. லைகா என்னும் வார்த்தையை யாரும் பார்க்க போவது கூட இல்லை. இவர்கள் தான் வீணாக அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
விஜய்யின் படத்துக்கு பிரச்சனை வருவது இது முதல் முறையல்ல . காவலன் படத்தின் போது திமுக அரசு பிரச்சனை செய்தது. துப்பாக்கி படத்தின் போது , கள்ள துப்பாக்கி என்னும் படத்தின் மூலமாக படத்தின் தலைப்புக்கு பிரச்சனை கொடுத்தார்கள். தலைவா படம் தான் பெரிய பிரச்சனையை சந்தித்தது. விஜய்யின் வளர்ச்சியை பார்த்து பயந்த அதிமுக அரசு படத்தை தடை செய்ய நினைத்தது. விஜய் அரசியலுக்கு வந்து விடுவாரோ என்பது இதற்கு காரணம். இவர்கள் தான் ரஜினியின் வளர்ச்சியை பார்த்து பயந்து "பாபா" படத்துக்கு பிரச்சனை செய்தார்கள். தலைவா படம் தமிழகத்தில் மட்டும் வெளிவராததால் பெரிய நஷ்டத்தை சந்தித்தது. அதே நிலை கத்தி படத்துக்கு வந்து விட்டால் அவ்வளவு தான். வெளி மாநிலங்களில் வந்து இங்கே வராவிட்டால், இன்டெர்னெட்டில் எளிதாக வந்துவிடும். இதே போல் தான் கமலின் விஸ்வரூபம் பட்டத்தின் போதும் பிரச்சனை செய்தார்கள். இதனால் கமல் மிகவும் மனம் நொந்து போனார். விருமாண்டி , தசாவதாரம் என கமலின் ஒவ்வொரு படங்களின் போது இப்படி தான் பிரச்சனை செய்கிறார்கள்.
கர்நாடகாவை சேர்ந்த ரஜினியின் படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆகிறது, ஆந்திராவை சேர்ந்த அஜித்தின் படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆகிறது. ஆனால் தமிழர்களாகிய கமல்ஹாசன் மற்றும் விஜய்யின் படங்களுக்கு மட்டும் ஏன் இத்தனை பிரச்சனைகள். இதன் மூலம் நாங்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கும், தல அஜித்துக்கும் எதிரானவர்கள் அல்ல. அவர்கள் படங்களை போல் இவர்கள் படங்களும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளிவந்தால் நன்றாக இருக்கும் என எண்ணும் ஒரு சாதாரண சினிமா ரசிகன். இந்த கத்தி பட போராட்டத்தில் தல அஜித்தின் ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாக இருப்பது வரவேற்கத்தக்கது. டிவிட்டர் , பேஸ்புக் முழுவதும் #IsupportKaththi, #ThalaThalapathi என்னும் வாசகங்கள் பிரபலமாகி வருகிறது.
எந்த பிரச்சனையும் இல்லாமல் கத்தி படம் தீபாவளிக்கு வெளிவர வேண்டும். இதற்கு நாம் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இதற்கு நாம் விஜய் ரசிகனாக இருக்க தேவையில்லை, ஒரு சாதாரண தமிழ் சினிமாவின் ரசிகனாக இருந்தால் போதும்.
பத்து மாதம் ஒரு குழந்தையை பெற்று எடுக்கும் தாய் கூட இத்தனை துன்பங்களை சந்தித்து இருக்க மாட்டாள் ஆனால் ஒரு படத்திற்காக ........ !!!! #ISupportKaththi