சென்னை சத்யம் தியேட்டரில் கத்தி படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது .
நடிகர் விஜய் நடித்து , ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் " கத்தி " . இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லைகா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பதால் கத்தி படத்திற்கு சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் .
பின்னர் தமிழ் அமைப்புகளும் , தயாரிப்பு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது . பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால் படம் திட்டமிட்டபடியே தீபாவளி அன்று ரீலிஸ் செய்யப்படும் என்றனர் . சில தியேட்டர்களில் புக்கிங்கும் தொடங்கியது .
ஆனால் நேற்று இரவு 11.45 மணி அளவில் சென்னை சத்யம் தியேட்டரை மர்ம் நபர்கள் தாக்கியுள்ளனர் . மூன்று பெட்ரோல் குண்டுகளையும் வீசியுள்ளனர் . தியேட்டரின் முன் பகுதி பலத்த சேதமடைந்துள்ளது .
இது குறித்து போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர் .