மருத்துவ உலகம் எவ்வளவோ முன்னேற்றங்களை கண்டிருந்தாலும் அவ்வப்போது குலை
நடுங்க வைக்கும் சில கொடிய நோய்கள் மனிதர்களை தாக்குவதும், அதற்கு பலர்
பலியாவதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பறவை காய்ச்சல் பாடாய்படுத்தியது.
இந்நிலையில் ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ‘எபோலா’ வைரஸ் காய்ச்சல் இந்தியாவிலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நைஜீரியா, லைபீரியா, சியானா, சையர் லியோன் ஆகிய 4 நாடுகளில், எபோலா வைரஸ் காய்ச்சல் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
இந்த நாடுகளில் இக்கொடிய காய்ச்சலுக்கு இதுவரை 1200 பேர் வரை பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள சையர் நாட்டில் எபோலா என்ற நதிக்கரை பகுதியில்தான் இந்த வைரஸ் காய்ச்சல் முதலில் பரவியுள்ளது.
இதில் கொத்து கொத்தாக பலர் செத்து மடிந்துள்ளனர். இதனாலேயே இந்த வைரஸ் காய்ச்சல் எபோலா என்று அழைக்கப்பட்டுள்ளது.
எபோலா காய்ச்சல் பாதிப்புக்குள்ளான சியானா, வைபீரியா, நைஜீரியா, சையர் லியோன் ஆகிய 4 நாடுகளிலும் சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருவதாக மத்திய அரசு கணக்கெடுத்துள்ளது. ஐ.நா. அமைதிப்படையில் அங்கம் வகிக்கும் இந்திய ராணுவ வீரர்கள் பலரும் ஆப்பிரிக்க நாடுகளில் பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்களில் சுமார் 1000 இந்தியர்கள் எபோலா வைரஸ் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய சுகாதார துறை மந்திரி ஹர்ஸ்வர்தன் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நோயின் தாக்கம் வரும் காலங்களில் இன்னும் அதிகமாக வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது கூடுதல் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதுபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டால் ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும், அங்கு பணியாற்றும் நமது நாட்டின் ராணுவ வீரர்களும் அதிக அளவில் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அங்கிருந்து வரும் இந்தியர்கள் மூலமாக எபோலா வைரஸ் காய்ச்சல் இங்கும் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்நோய் பரவாமல் தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது நாடு முழுவதும் விமான நிலையங்களை உஷார்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி சென்னை விமான நிலையத்திலும் கண்காணிப்பு பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சென்னை மாநகருக்குள் நுழைபவர்களை தீவிர பரிசோதனைக்குட்படுத்தியே வெளியில் அனுப்ப வேண்டும் என்று உத்தர விடப்பட்டிருக்கிறது. இதன்படி நேற்று இரவு வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்தவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டது. அப்போது நைஜீரியாவில் இருந்து வெங்கடேசன் என்பவர் சென்னை திரும்பியது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை உடனடியாக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ள எபோலா வைரஸ் காய்ச்சல் பீதி வரும் நாட்களில் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.