கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சினுக்கு கவுரவமாக எம்.பி. பதவியை காங்கிரஸ் அரசு தந்தது. ஆனால் அதனை எதற்கும் பயன்படுத்தாமல் இருந்தார். ஆனால் அதற்குரிய சம்பளத்தை மட்டும் வாங்கி கொண்டார். கடந்த வருடம் முழுவதும் அவர் பாராளுமன்றம் வந்ததற்கான அடையாளமே இல்லை. இது பலராலும் விமர்ச்சிக்கப்பட்டது.
கிரிக்கெட்டில் சச்சின் கடவுளாக மதிக்கப்பட்டாலும், பாராளுமன்றத்தில் அவர் சாதாரண உறுப்பினர் தான். 2012 இல் ராஜ்ய சபா எம்.பி. ஆன சச்சின் இது வரை 3 முறை தான் ராஜ்ய சபாவிற்கு வந்து உள்ளார். ஒரு துறையில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்க இந்த பதவிகள் தரப்படுகிறது ஆனால் அவர்கள் இந்த பதவிகளை மதிப்பதே இல்லை.
இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்த சச்சின் தனது மவுனத்தை கலைத்தார். சச்சின் யாரையும் அவமதிப்பதற்காக இதனை செய்யவில்லை. சச்சினின் அண்ணன் அஜித்துக்கு பைபாஸ் சர்ஜரி செய்து உள்ளதால் சச்சின் அந்த கவலையில் இருந்து வந்தார். அதனால் அவரால் ராஜ்ய சபாவிற்கு வரமுடியவில்லை என விளக்கம் தந்து உள்ளார்.
அஜித்துக்கு கடந்த வாரம் தான் சர்ஜரி செய்யப்பட்டது, சச்சின் ஆனால் 2 ஆண்டுகளில் 3 முறை தான் வந்து உள்ளார். ராஜ்ய சபாவிற்கு வர முடியாத சச்சினால் ஐ.பி.எல்.லுக்கு செல்ல் முடிகிறது. தனக்கு இருந்த மரியாதை நிலைத்து இருக்க சச்சின் எம்.பி. பதவியை கொடுக்கும் போதே வேண்டாம் என கூறி இருக்க வேண்டும். இல்லையெனில் ஒழுங்காக செயல்பட்டு இருக்க வேண்டும்.