உலகம் முழுவதும் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும் நோய் எபோலா . இது இப்போது ஆப்ரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது . மத்திய அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் பரிசோதித்து தீவிர சோதனைக்குப் பின்னரே அனுப்பப்படுகின்றனர் .
ஆகஸ்டு 9 ஆம் தேதி சென்னையில் ஒரு பயணிக்கு நோய் இருப்பதற்கான அறிகுறிகள் இருந்ததாக தெரிந்தது . ஆனால் பரிசோதனையில் அவருக்கு எபோலா இல்லை என்பது உறுதியானது .
இதைப் போன்று மும்பையில் ஒரு பயணியும் சந்தேகம் ஏற்பட்டது . அதுவும் இல்லை என்று நிரூபணமானது .
இதற்காக மத்திய அரசு உதவிக்காக ஒரு ஹெல்ப்லைன் ஒன்றை அமைத்துள்ளது . அந்த ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ள :
23063205
23061469
23061302