பிரிட்டன் தலைநகர் லண்டன் அருகே உள்ள கிரேபோர்டில் சாரா-பென் ஸ்மித்
தம்பதியர் வசித்து வருகின்றனர். கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் பிரட்டி
என்ற ஆண் மகனை பெற்றெடுத்த சாரா, தற்போது மேலும் மூன்று குழந்தைகளை
பெற்றெடுத்தார்.
31 வயதாகும் சாராவின் கணவர் பென் ஸ்மித் அஞ்சல் துறையில் பணியாற்றி வருகிறார். பிரட்டியை பெற்றெடுத்த உடன் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளதாக தெரிந்ததும் தான் அதிர்ச்சியடைந்ததாக கூறிய சாரா, மூன்று குழந்தைகள் கர்ப்பம் தரித்துள்ளதாக கூறியதும் மேலும் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்தார். மூன்று கர்ப்பத்தில் ஒன்றை கலைத்துவிட்டால் மற்ற இரு குழந்தைகள் நல்லபடியாக பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறிய போதும் தம்பதியர் இருவரும் கருவை கலைக்க மறுத்துவிட்டனர்.
இயற்கையாகவே கர்ப்பமடைந்த சாரா ஒன்பது மாதங்களுக்கு பின் ஸ்டான்லி, டெய்ஸி மற்றும் ரெக்கி ஆகிய மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தார். கர்ப்பம் தரித்த 33 வாரங்களுக்கு பின் கருவில் இருந்த ஒரு குழந்தை சுகவீனம் அடைவது போல் காணப்பட்டதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மூன்று குழந்தைகளையும் ஒவ்வொன்றாக பிறக்க வைத்தனர். மூன்று குழந்தைகளையும் இங்கு பேட்டரில் வைத்ததை பார்த்தபோது தனக்கு மூச்சே நின்றுவிடும் போல் இருந்ததாக தெரிவித்த சாரா தங்கள் குழந்தைகளை மருத்துவமனையிலிருந்து நல்லபடியாக வீட்டிற்கு அழைத்து வந்த போது மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக கூறினார்.
பிரட்டி பிறந்ததற்கு பின் குடும்பத்தில் மூவர் மட்டுமே இருந்த நிலையில், தற்போது மேலும் முன்று குழந்தைகள் பிறந்துள்ளதால் தங்கள் வீடே நர்சரி பள்ளி போல் காணப்படுவதாக சாரா நகைச்சுவையாக கூறினார். தங்கள் குழந்தைகளுக்கு தேவையான பணிவிடைகளை செய்துவிட்டு அலுவலகம் செல்ல தினமும் இரண்டு மணி நேரம் பிடிப்பதாக கூறிய சாரா அதற்காக தாங்கள் கவலைப்படவில்லை என்றும் தெரிவித்தார்.