BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 4 August 2014

உடனே விட்டுவிட வேண்டிய 20 கெட்ட பழக்கவழக்கங்கள்

இரவில் ஏற்படும் பசிக்கு தீர்வாக பீட்சாக்கள் மற்றும் சாக்லெட் கேக் சாப்பிட்டு ஒவ்வொரு நாளும் தங்களின் ஆசையை முடித்து கொள்ளலாம். அது உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கைமாறும் செய்யாது. ஆனால் நீண்ட காலத்திற்கு உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடும். மேலும் தற்போது உடலில் பல நோய்கள் ஏற்படுவதற்கு பெரும் காரணம் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் தான்.

ஆகவே அத்தகைய பழக்கவழக்கங்களை பின்பற்றாமல், அதனை நிறுத்துவதற்கு முயல்வது, உடல் நலத்தை ஆரோக்கியத்தோடு நீண்ட நாட்கள் வைத்திருக்க உதவும். மேலும் அத்தகைய பழக்கங்கள் என்னவென்றும் பட்டியலிட்டுள்ளோம். அத்தகைய பழக்கங்கள் இருந்தால், எதுவும் தாமதமாகி விடவில்லை. உடனடியாக அந்த பழக்கங்களை விட்டு விட்டு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை இன்றே தொடங்கவும்.
1. மூக்கு/வாயை கிளறுதல்
இந்த எரிச்சலூட்டும் மற்றும் வேடிக்கையான பழக்கம் மோசமான பழக்கங்களில் ஒன்றாகும். இந்த பழக்கம் உடல் நலத்திற்கு மட்டும் மோசமானது மட்டுமல்ல. ஆனால் அது பொதுவான சமூக ஒழுங்கிற்கு எதிராக உள்ளது. மூக்கை குடைதல் பல்வேறு தொற்றுகளான ஜலதோஷம் மற்றும் ப்ளூ நோய்களை ஏற்படுத்தும் வைரஸ் சளி மூலம் உடலுக்குள் செல்ல வழி வகுக்கிறது. பல இடங்களில் கை வைத்து விட்டு, அதே கையை மூக்கில் வைப்பது இறுதியாக மருத்துவமனையில் தங்களை சேர்த்து விடும்



2. குருட்டுத்தனமான குடிப்பழக்கம்
அதிகப்படியாக மது அருந்துதல், உலகம் முழுவதும் பல மரணங்கள் ஏற்படவும், மருத்துவமனையில் சேர்க்கவும் காரணமாகவும் அமைகிறது. குருட்டுத்தனமான குடிப்பழக்கம் நீண்ட கால சுகாதார பிரச்சனைகளான கல்லீரல் பிரச்சனை மற்றும் உடனடி பிரச்சனைகளான எடை அதிகரித்தல், மயக்கம் மற்றும் சோர்வு போன்ற குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன. இத்தகைய பாதிப்பில் இருந்து காப்பாற்றி கொள்ள மது அருந்துவதை அளவாக வைத்து கொள்வது தான் தீர்வாகும்.
3. இரவில் ஒரு ‘ஆந்தை’ ஆவது
இரவில் 8 மணிநேர நல்ல தூக்கம் இல்லாமல் போனால், நோய் எதிர்ப்பு சக்தி, பிற உடல் செயல்முறைகள் மற்றும் உடல் அமைப்புகள் சேதமாவதற்கு வழிவகுக்கிறீர்கள் என்று அர்த்தம். தூக்கமின்மை காரணமாக, நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருக்கும். எனவே கிருமிகளை எதிர்த்து போராடும் செல்களை குறைவாகவே உற்பத்தி செய்கிறது.




4. தனிமையில் இருப்பது
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு தேவை ஆரோக்கியமான மற்றும் புதிய மனம். மனம் ஆரோக்கியமற்று இருந்தால் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிப்பது மட்டுமல்ல, பல உடல் உபாதைகளுக்கு இழுத்து சென்றுவிடும். பெரும்பாலான நேரத்தை தனிமையிலோ அல்லது மற்ற சமூக சவால்களை எதிர்கொள்வதிலோ செலவழித்தால், மனநலம் பாதிக்கிறது. மேலும் மக்களிடம் இருந்து, தனிமையானது பிரித்து சென்று விட்டு, மனதிற்கும் உடலுக்கும் அழுத்தத்தைக் கொடுக்கிறது.
5. நீண்ட நேரம் ஹெட்ஃபோன்கள் அணிவது
ஹெட்ஃபோன்கள் அல்லது காதில் பொருத்தகூடிய பாட்டு கேட்கும் கருவிகள் நாள் முழுவதும் சிலருக்கு உற்ற துணையாக இருக்கிறது. பயணம் செய்யும் போதும் அல்லது வேலை செய்யும் போதும், நேரத்தை கடத்துவதற்கு இசையை கேட்கிறோம். இடைவேளை இல்லாமல், மணிக்கணக்கில் ஹெட்போன்கள் காதுகளில் பொருத்தப்பட்டு இருந்தால், இந்த பழக்கத்தை பரிசீலனை செய்வது நல்லது.




6. நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பது
பல மணி நேரம் மெத்தையில் அமர்ந்து, இந்த முட்டாள் பெட்டியை பார்த்து கொண்டிருப்பது இதயத்திற்கும், கண்களுக்கும் ஆபத்தாக முடியும். அதிக நேரம் தொலைகாட்சி பார்ப்பது இதய நோய், பக்கவாதம் மற்றும் உடல் பருமன் ஏற்படும் சாத்திய கூறுகளை அதிகரிக்கிறது.
7. ஹீல்ஸ் அணிவது
தினந்தோறும் ஹீல்ஸ் அணியும் பெண்கள், உடலுக்கு அதிக தீங்கு விளைவித்துக் கொள்கின்றனர். ஹீல்ஸ் அழகு தருவது மட்டுமின்றி, அதை அணிவதால் மூட்டுகளில் அதிகப்படியான அழுத்தம் ஏற்படுகிறது. இது ஆர்த்திரிடிஸ், முதுகு வலி மற்றும் தசை நாண் காயங்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், குதிகால் சம்பந்தமான விபத்துகளையும் ஏற்படுத்துகிறது.



8. அதிகப்படியான எடை தூக்குவது
அதிக எடையுள்ள பைகளை சுமந்து செல்வது, நீண்ட கால பாதிப்புகளான கடுமையான முதுகு வலி, கழுத்து வலி மற்றும் தோற்ற குறைபாட்டை ஏற்படுத்தும். எனவே, முன்கூட்டியே உடலானது வயதான தோற்றம் ஏற்படுவதை தவிர்க்க, உடலிற்கு ஒரு உதவி செய்யுங்கள். அதாவது அதிக எடையுள்ள பையை சுமக்க வேண்டாம்.



9. மேக்-கப்புடன் தூங்குதல்
பல பெண்களுக்கு இன்னமும் மேக்-கப்புடன் தூங்கும் பழக்கம் இருக்கிறது. மேக்-கப்புடன் தூங்குவது, சருமத்தில் உள்ள துளைகள் அடைத்து கொள்வதற்கும், நெரிசலான தோல் மற்றும் புள்ளிகள் ஏற்படுவதற்கும் வழிவகுக்கிறது. தவிர, கண் மை(மஸ்காரா) மற்றும் பிற கண் அழகுப் பொருட்கள் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பார்வை இழப்பை கூட ஏற்படுத்தலாம்.



10. நொறுக்கு தீனி சாப்பிடுவது
பசியில்லாத நேரத்திலும் நொறுக்குத் தீனிகளை நன்கு சாப்பிட்டால், பின் எப்போதுமே பசியே ஏற்படாமல் இருக்கும். இதனால் வயிறு எப்போதுமே நிறைந்திருக்கும். இந்த அதிகப்படியான உணவு அதிகப்படியான கலோரிகளையும் ஆரோக்கியமற்ற ஊட்டசத்துகளையும் உடலுக்கு ஏற்றி விடுவது மட்டுமல்லாமல், நீரிழிவு, இதய நோய் மற்றும் அஜீரண கோளாறு போன்ற நீண்ட கால உடல் பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது.



11. புகைப்பிடிப்பது
நாள் ஓன்றுக்கு ஒரு சிகரெட் பிடித்தால் கூட இரத்தம் உறைதல் ஏற்பட்டு, துரிதமான இரத்த ஓட்டம் தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக இரத்த நாளங்களிலும் தமனிகளிலும் ஏற்படும் கட்டிகளினால் இரத்த ஓட்டம் தடை ஏற்படுகிறது.
12. தொடர்ந்து பொய் பேசுதல்
அந்த சிறு வெள்ளை பொய்கள் உடல் நலத்திற்கு தீவிர சேதத்தை ஏற்படுத்தலாம். தொடர்ந்து பொய் பேசிக் கொண்டிருந்தால், உண்மையை பற்றிய பயம் முகத்தில் வெளிப்படும். இது உள்ளுக்குள் ஒரு பயத்தை உண்டாக்கி மன அழுத்தத்தை கொடுக்கும்.



13. மருந்து மாத்திரைகளில் வாழ்தல்
அடிக்கடி மருந்து மாத்திரைகள் எடுத்து கொள்வது மிகவும் ஆபத்தானது. அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.



14. காலை சிற்றுண்டியை தவிர்ப்பது
ஒவ்வொரு நாளும் காலை உணவு மிகவும் முக்கியமான உணவாகும். முழு காலை உணவில் காபி மற்றும் ஒரு ரொட்டி என்றால் அது ஆரோக்கியமற்ற எதிர்காலத்தை உங்களுக்காக அமைத்து கொள்கிறீர்கள் என்று அர்த்தம். இது செரிமான அமைபை பாதிக்கும். தவிர, இது ஆற்றல் இருப்புக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, வளர்சிதை மாற்ற்த்தை எதிர் மறையாக பாதிக்கும்.
15. துரித உணவுகளின் மேல் காதல்
துரித உணவுகளில் டிரான்ஸ் கொழுப்பு, சர்க்கரை, நறுமண பொருட்கள் மற்றும் செயற்கை பாதுகாப்பூட்டிகள் நிறைந்தது. இது வயிற்றை பெருக செய்து உயர் கொழுப்பு, நீரிழிவு, இதய பிரச்சினைகள் போன்ற கடுமையான உடல் நல பிரச்சினைகளை நீண்ட காலத்திற்கு ஏற்படுத்துகின்றன.



16. நகம் கடிப்பது
கைகள் தொடந்து பல இடங்களில் பயணித்து நாள் முழுவதும் பல செயல்களை செய்கின்றன. பிறகு இந்த அசிங்கமான, கிருமி நிரப்பப்பட்ட விரல்களை வாயில் வைக்கும் போது ஜலதோஷம் அல்லது ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டு, நீண்ட நாட்கள் படுக்கையில் கிடக்க நேரிடலாம். எனவே, இப்போதே இந்த அசிங்கமான பழக்கத்தை நிறுத்தி விடவும்.



17. உடலுறவைத் தவிர்த்தல்
குறைந்த எழுச்சிக்கு என்ன காரணம் இருந்தாலும் சரி, அதிக வேலை பளுவோ அல்லது மன அழுத்தமோ, பல நாட்கள் அல்லது பல மாதங்கள் செக்ஸை தவிர்ப்பது நல்லது அல்ல. செக்ஸ் உடல் நலத்திற்கு நல்லது. அது உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிப்பது மட்டுமல்ல, உறவை மேம்படுத்தவும் உதவும். இந்த மகிழ்ச்சிகரமான செயலில் அக்கறை இல்லையெனில் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. ஏனெனில், குறைந்த எழுச்சி மனஅழுத்தத்திற்கு அப்பாற் பட்டது. அது தைராய்டு, உயர் இரத்த அழுத்தம் அல்லது ஒரு ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக ஏற்படுகிறது.



18. வேகமாக சாப்பிடுதல்
வேலை அழுத்தம் அல்லது நேரம் இல்லாமை காரணமாக மின்னல் வேகத்தில் உணவு உண்பது செரிமான அமைப்பை தீவிரமாக பாதிக்கிறது. ஒவ்வொரு உணவையும் சாப்பிட்டு முடிக்க குறைந்தது 20 நிமிடங்களாவது எடுத்துக் கொள்ள வேண்டும். சரியாக மென்று தின்னாமல் அப்படியே உணவை விழுங்கினால், அது வயிற்று உப்புசம், வயிறு வீக்கம் மற்றும் அதிகப்படியான வாயுவை ஏற்படுத்தும்.



19. நீண்ட காலமாக ஆரோக்கியமற்ற உறவை வைத்திருப்பது
சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் பெற முடியாத ஒரு உறவில் நீண்ட காலம் நிலைத்திருப்பீர்கள் என்றால், அந்த நொடியிலேயே அதன் முடிச்சை அவிழ்த்து விடுவது நல்லது. ஆரோக்கியமற்ற உறவு மன அழுத்தம் ஏற்படுத்தி, மேலும் இரத்த அழுத்தம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து மற்றும் செரிமான அமைப்பை வலுவிழக்க செய்கிறது.



20. தோலை கசக்குதல்
முகத்தில் சில மரு காணப்பட்டால் தொடர்ந்து அதை கசக்கி கொண்டிருப்பதை விட வேண்டும். தொடர்ந்து முகப்பருவை பற்றி கவலை பட்டு கொண்டே இருந்தால், அது மேலும் அதிகரிக்கும். தவிர இது வடுக்கள் மற்றும் வீக்கம் ஏற்பட காரணமாகி விடும். எனவே, தோல் பிரச்சினைகள் மோசமாவதை தவிர்க்க, முகத்தை தொட்டு அழுத்தி கொண்டிருப்பதை நிறுத்தவும்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies